Pages

Thursday, January 18, 2018

தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்க்க வேகக் கட்டுப்பாடு ~ அரசிதழில் வெளியீடு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் மோட்டார் வாகனங்களில் ஏற்படும் சாலை விபத்துக்களை தவிர்க்கும் விதமாக மோட்டார் வாகனங்களின் வேகத்தினை சீராக்கிவிடும் பொருட்டு முக்கிய பிரதமான சாலைகளில் வேகக் கட்டுப்பாடானது நிர்ணயம் செய்து மாவட்ட அரசிதழில் கடந்த 05.01.2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (18.01.2018) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் மோட்டார் வாகனங்களில் ஏற்படும் சாலை விபத்துக்களை தவிர்க்கும் விதமாக மோட்டார் வாகனங்களின் வேகத்தினை சீராக்கிவிடும் பொருட்டு முக்கிய பிரதமான சாலைகளில் வேகக் கட்டுப்பாடானது நிர்ணயம் செய்து மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் உபகோட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் நாகப்பட்டிணம்- தஞ்சாவூர்-திருச்சி சாலையில் குறைந்தபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்திலும், டி சந்திப்பு பகுதியில் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர், ஊரக பகுதிகளில் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில், தேசிய நெடுஞ்சாலை எண் 45சி அணைக்கரை-பாபநாசம் சாலையில் 40-80 கிலோ மீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலை எண் 226 நீட்சி பெரம்பலூர்-தஞ்சாவ10ர் சாலை வளைவுகளில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலையில் குடியிருப்பு பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாடானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைகளான தஞ்சாவூர் - ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை - பேராவூரணி – திருவையாறு - கும்பகோணம் - பாபநாசம் - திருவிடைமருதூர் உபகோட்டங்களுக்கு உட்பட்ட பெரம்பலூர்-மானாமதுரை மாநில நெடுஞ்சாலை எண் 27ல், நாகை - கூடலூர் - மைசூர் மாநில நெடுஞ்சாலை எண் 89ல், தஞ்சாவூர்-மன்னார்குடி – திருத்துறைப10ண்டி- வேதராண்யம் -கோடியக்கரை மாநில நெடுஞ்சாலை எண் 63ல், தஞ்சாவூர் - வல்லம் மாநில நெடுஞ்சாலை எண் 99ஏல், தஞ்சாவூர் இரண்டாம் கட்ட புறவழிச்சாலை, கல்லணை –காவிரிப்பட்டிணம் மாநில நெடுஞ்சாலை எண் 22ல், திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி-பட்டுக்கோட்டை மாநில நெடுஞ்சாலை எண் 99ல், விக்ரவண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை எண் 8ல், திருவாரூர் - குடவாசல்- கும்பகோணம் மாநில நெடுஞ்சாலை எண் 65ல், கும்பகோணம்-காரைக்கால் மாநில நெடுஞ்சாலை எண் 147ல், கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டிணம் மாநில நெடுஞ்சாலை எண் 66ல், நாகூர்-நன்னிலம்-நாச்சியார்கோவில் மாநில நெடுஞ்சாலை எண் 67ல், கும்பகோணம் நகர புறவழிச்சாலை மாநில நெடுஞ்சாலை எண் 209ல், கும்பகோணம்-சீர்காழி மாநில நெடுஞ்சாலை எண் 64ல், வைத்தீஸ்வரன் கோவில்- அணைக்கரை மாநில நெடுஞ்சாலை எண் 150ல்,  மன்னார்குடி - சேதுபாவாசத்திரம் மாநில நெடுஞ்சாலை எண் 146ல், நாகூர்-நாகப்பட்டிணம் - இராமநாதபுரம் - தூத்துக்குடி மாநில நெடுஞ்சாலை, முசிறி-குளித்தலை - புதுக்கோட்டை- ஆலங்குடி- பேராவூரணி - சேதுபாவாசத்திரம் சாலை மாநில நெடுஞ்சாலைகளில் சந்திப்பு, வளைவுகள், பள்ளிகள் ஆகிய பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும், குடியிருப்பு பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், நேரான சாலை பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல வேகக் கட்டுப்பாடானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் உள்ள சாலைகளில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் வேகத்திற்கு மட்டுமே வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க வேண்டும்.  மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  வாகனம் பறிமுதல் செய்யப்படும் என  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே வாகன ஓட்டிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள சாலைகளில் கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர்  சுப்பிரமணியன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் முருகேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...