Pages

Wednesday, January 3, 2018

தஞ்சை மாவட்ட உள்ளாட்சி வார்டு மறுவரையறை: கருத்துருக்களை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை
வரைவு கருத்துருக்கள் மீது பொது மக்கள் கருத்துக்கள் மற்றும்
ஆட்சேபணைகளைக் கோருதல் தொடர்பாக வருகின்ற 05.01.2018 வரை
கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டம் 23/2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை அடிப்படையாக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு மற்றும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வார்டு எல்லைகளை வரையறை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட வரைவு மறுவரையறை கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம், சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகம், சம்மந்தப்பட்ட நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வரைவு மறுவரையறையின் மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள்  எழுத்துப் பூர்வமாக சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாக 02.01.2018 அன்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேற்படி கால அவகாசம் போதுமானதாக இல்லையென்று தெரிவித்து கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் மறுவரையறை ஆணையத்தால் பரிசீலிக்கப்பட்டதை தொடர்ந்து வார்டு மறுவரையறை குறித்த ஆட்சேபனைகள் அல்லது கருத்துக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் 05.01.2018 அன்று மாலை 5.00 மணிக்குள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை (Delimitation Authority) அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என மேற்படி ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் குறித்து மறுவரையறை ஆணையத்தால் நடத்தப்படும் மண்டல வாரியான ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  அச்சமயம், ஆட்சேபனை அல்லது கருத்து தெரிவித்தவர்கள் நேரடியாக ஆய்வின் போது ஆஜராகி தங்களின் கோரிக்கைளை எடுத்துரைக்கலாம்.

மேற்குறிப்பிட்ட கால நேரத்திற்குப் பிறகு வரப்பெறும் மற்றும் பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபனைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...