Pages

Thursday, January 11, 2018

துபையில் டேக்ஸி ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் உணவகம்!

அதிரை நியூஸ்: ஜன. 11
துபை, கராமா, ஷேக் ஹம்தான் காலனியில் செயல்படும் ஒரு சிறிய உணவகம் துபை டேக்ஸி டிரைவர்களுக்கு 'டீ'யை இலவசமாகவும், உணவுகளை 20 சதவிகித தள்ளுபடியிலும் வழங்கி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டை அமீரகம் 'வழங்கி மகிழும் ஆண்டாக' கடைபிடித்ததால் அதன் ஒரு பகுதியாகவும், பணியின் காரணமாக பல வேளைகள் சரியான நேரத்திற்கு சாப்பிடக்கூட நேரமின்றி அவதிப்படும் டேக்ஸி ஓட்டுனர்களின் துயரத்திற்கு ஒரளவு உதவவும் இந்த சேவையை துபை போக்குவரத்து துறையுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு வழங்கி வருவதாக உணவக உரிமையாளர் தெரிவித்தார்.

சீருடையுடன் பணியிலிருக்கும் எந்த டேக்ஸி ஓட்டுனரும் இந்த Kaati Express உணவகத்தில் இலவசமாக தேநீர் அருந்துவதுடன் 20 தள்ளுபடியில் உணவருந்தவும் செய்யலாம். இந்த உணவகத்தின் இன்னொரு கிளை பிஸ்னஸ் பே (Business Bay) பகுதியில் பேஸ் வாட்டர் டவரிலும் (Bays Water Tower) செயல்படுகிறது.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...