Pages

Saturday, January 13, 2018

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் 'தீனியாத் ஆசிரியர்' ஹஜரத் ஜமால் முகமது வஃபாத்!

அதிராம்பட்டினம், ஜன.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை, 24 ஆண்டுகள் மாணவர்களுக்கு 'நீதி போதனை' கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்தவர் ஹாஜி என்.எஸ் ஜமால் முஹம்மது (வயது 76). தீனியாத் ஆசிரியரான இவர் 'ஹஜரத்' என அனைத்து மாணவர்களாலும் அன்புடன் அழைக்கப்படுபவர்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்புச் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

8 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. எங்கள் ஆசிரியருக்கு அல்லாஹ் உயர்ந்த சுவர்க்கத்தை தருவானாக ஆமின்.
  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்

  அவர்கள் பாவங்களை மன்னித்து மறுமையில் வெற்றியை கொடுப்பானாகா! ஆமின்

  ReplyDelete
 3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஊன்

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

  பள்ளிக்குச் செல்லாமல் பல முறை விடுப்பு எடுத்த காரணத்தினால் என்னை வகுப்பறையில் இருந்து வெளியே நிக்க வைத்து விடுவார்கள் என் வகுப்பாசிரியர்கள்.. நான் வெளியே நிற்பதை பார்த்ததும் அடடே நம்ம #அஜ்மீர்_ஸ்டோர் வீட்டுப் பிள்ளனு சொல்லி, உடனே வந்து எனக்காக பல முறை எனது வகுப்பாசிரியரிடம் சிபாரிசு செய்து வகுப்பு உள்ளே அனுப்புவார்கள்..

  அதே போல் நாங்கள் உடல்நிலை சரியில்லாமல் பள்ளிக்கு வந்தாலும் எங்களுக்காக அவர்கள் பல பொருளுதவிகளையும் செய்திருக்கிறார்கள்..

  இந்த அன்பான நல்லுள்ளம் படைத்த எங்களின் ஜமால் ஹஜ்ரத் மரணச் செய்தி உண்மையில் என் மனதை வருடுகிறது..

  எல்லாம் வல்ல அல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னித்து உயரிய சுவர்க்கமான #ஜன்னத்துல்_ஃபிர்தவ்ஸை நசீபாக்கட்டும்.. ஆமீன்!

  ReplyDelete
 6. தன்னிடம் படித்த மாணவர்களை ஆசிரியர் மறக்கக்கூடும் ஆனால் மாணவரால் சாத்தியமில்லை., முன்னாள் மாணவர்களை " என்னப்பா எப்படியிருக்கே " என்று நலம்விசாரிப்பதில் நம் தீனியாத் ஆசியருக்கு நிகரில்லை. அன்று குடிசையாக இருந்த பள்ளியை கட்டிடமாக மாற்ற வேண்டுமென்று பரிந்துரைந்தவர் இவரு தான். நல்லபோதனைகளை மாணவர்களுக்கு போதித்த ஆசிரியரின் மரணம் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியான தகவல். அவரின் நீதிபோதனைகளை கேட்ட நாம் நம்சந்ததினருக்கு எத்திவைப்பது அவரை நாம் நினைவுக்கூர்வதாகும்., எளிமையாக வாழ்ந்து எண்ணற்ற மாணவர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்த நம் தீனியாத் ஆசிரியர் ஜமால் முகமது அவர்களின் மறுமைவாழ்வு சிறக்க நாம் துவா செய்வோம் - ஆமின்.

  ReplyDelete
 7. இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிவூன்
  எல்லாம்வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமையில் வெற்றியை கொடுப்பானக

  ReplyDelete
 8. இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிவூன்
  எல்லாம்வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமையில் வெற்றியை கொடுப்பானக

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...