Pages

Wednesday, January 3, 2018

கிணற்றில் கிடந்த சடலம் மீட்பு (படங்கள்)

பேராவூரணி ஜன.03
பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி கிராமத்தில் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள கிணற்றில் தலைகுப்புற ஒரு ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அதிகாரிகள் உதவியோடு மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிணற்றில் சடலமாக மிதந்தவர், அருகில் உள்ள  இந்திரா நகர் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி மகன் ராஜேந்திரன் (வயது 36) என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...