Pages

Saturday, January 13, 2018

அதிராம்பட்டினத்தில் 'சாதித்து காட்டுவோம்' கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜன.13
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், SSLC, +2 அரசுப் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை சாரா திருமண மஹாலில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான்
தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேக்தாவூது, துணைத் தலைவர்  அதிரை ராஜிக் அகமது, துணைச்செயலாளர் முகமது பாஷா, பொருளாளர் ஜாஃபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அவ்வமைப்பின் தேர்வு வழிகாட்டி பயிற்சியாளர்கள் உமர், ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி பயிற்சி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ஆங்கிலம் - தமிழ் மொழி வழி தேர்வு மாதிரி வினா-விடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இதையொட்டி, அதிராம்பட்டினம் TNTJ கிளை-2 சார்பில், இலவச புத்தக ஸ்டால் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான விளக்கங்கள் அடங்கிய நூல்களை மாணவர்கள் இலவசமாக பெற்றுச்சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் கிளைகளின் நிர்வாகிகள் நவாப்ஷா, ஹைதர் அலி, அல்லா பிச்சை, அ.மு அப்துல் வஹாப், பஜால் முகைதீன், சிராஜுதீன், தீனுல் ஹக், எம்.ஐ அப்துல் ஜப்பார், எம். அகமது அப்துல் மஹ்சின், சேக்தாவூது, எஸ். நிஜாமுதீன் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...