Pages

Tuesday, January 2, 2018

'முத்தலாக்' தடை மசோதா குறித்து அதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.02
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ.அப்துல் முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு பேசியது;
இந்தியத் திருநாட்டில் வாழும் அனைத்து மக்களும் எல்லாம் பெற்று வாழ சம உரிமை உண்டு. அரசியல் சாசனம் அதற்கு வழிவகுத்துத் தந்துள்ளது. ஆனால், இவற்றை சீர்குலைக்கும் வகையில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு முத்தலாக் மசோதாவை கொண்டு வந்துள்ளது.

முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்பையும் மீறி முத்தலாக் சட்ட முன்வடிவை மக்களவையில் கடந்த டிச.28 ந் தேதி சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இவை, இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு எதிரானது. இவற்றை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உட்பட பட்டுக்கோட்டை வட்டாரப் அனைத்துப் பள்ளிவாசல் ஜமாத்தார்கள், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே, எதிர்வரும் ஜன.5 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், அனைவரும் தவறாது கலந்துகொண்டு அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்' என்றார்.

முன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ. சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது நன்றி கூறினார். இக்கூட்டத்தில், அதிரை பேரூர் துணைச் செயலர் அபு பக்கர், என்.எம் முகமது ஹனீபா, அப்துல் ஜப்பார், சாகுல் ஹமீது மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

1 comment:

  1. நம் சமுதாய அமைப்பு, அரசியல் கட்சி இவர்களெல்லாம் நாட்டின் நடப்புகள் தெரிந்தும் மொவனமாக இருப்பது கவலைக்குரியது. 19 மாநிலங்களில் காவி அரசு அவனவன் தினமும் சமுதாயத்துக்கு எதிராக ஸ்டேட்மெண்ட் விடுறான்.,ஹந்துஸ்தான் ஹிந்துக்கள் என்கிறான் .., வெட்டுவேன் நறுக்குவேன் மருத்துவர்கள் செய்யும் வேலையை இவன் செய்கிறான்.,உச்சக்கட்டத்தில் ஷரியத் சட்டத்தில் கைவைக்கிறான்., சட்டம் அமலாக்கப்பட்ட பின் பெருபான்மையான ஆண்கள் தண்டிக்கும் வைகையில் இருக்கும்., ஷரியத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் கிடைக்கும் ஆனால் அவன் காவி கொண்டு வரும் சட்டத்தில் ஒன்றுமில்லை., ஆண்களை தண்டித்து பணத்தை புடுங்கவே ஒரு சட்டம் !! தேவையா? ஒரு சிலர் தவறு செய்வதால் அதனை சாதகமாக்க மத்திய அரசு முயல்கிறது. கூட்டணிக்கு தான் நம் சமுதாயக்கட்சி அலைகிறது ஆனால் மார்க்க விஷயத்தை இதுவரை கண்டுகொள்ளவில்லை - வேதனையான விசயம் - அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...