Pages

Tuesday, January 16, 2018

அமீரகத் தயாரிப்பில் முதல் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஜன.16
அமீரகத்தின் சுய தயாரிப்பில் உருவான முதலாவது எலக்ட்ரிக் பஸ் அபுதாபியில் அறிமுகம்

எண்ணெய் வள நாடான அமீரகத்தில் எண்ணெய் தேவையில்லா முதலாவது முழு மின்சாரப் பேருந்தை அபுதாபி கலீபா பல்கலைக்கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் ஒரு அங்கமான மஸ்தார் கல்விக் குழுமமும் அபுதாபி போக்குவரத்து தொழில்துறையும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தப் பேருந்தின் பேட்டரிகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 150 கி.மீ தூரத்திற்கு தொடர்ந்து இயக்கலாம்.

சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏதுவான இந்த பஸ்ஸில் 27 இருக்கைகளும், அதிகப் பயணிகள் நின்று பயணம் செய்வதற்கான இடவசதியும், தரைதள படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்திற்கு ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனம் வடிவமைத்த எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 18 ஆம் தேதி முதல் மஸ்தார் சிட்டியில் நடைபெறவுள்ள Abu Dhabi Sustainability Week, (ADSW)  நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் இந்தப் பேருந்தை நேரில் பார்வையிட அனுமதிக்கப்படுவர். இந்தப் பஸ்ஸின் நீளம் 10.5 மீட்டர், அகலம் 2.5 மீட்டர்.(Visitors to the Abu Dhabi National Exhibition Centre during ADSW were able to view the new Eco Bus.)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...