Pages

Friday, January 5, 2018

அமெரிக்காவில் பனிப்புயல் வீசும்! அதிரையர்கள் கவனமாக இருக்கவும்!!

அதிரை நியூஸ்: ஜன.05
அமெரிக்காவில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பனிப்புயல் வீசும்! அதிரையர்கள் கவனமாக இருக்கவும்!!

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர பிரதேசங்களான லாங் ஐலேண்ட், நியூ ஜெர்ஸி போன்ற பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை அன்று மிகவும் குளிருடன் கூடிய பனிப்புயல் (explosive cyclogenesis) வீசும் என அமெரிக்காவின் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிளடெல்பியாவில் உறைபனி கொட்டத்துவங்கிவிட்டது என்றும் இவை 6 இஞ்ச் அளவிற்கு உறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

"bomb cyclone" அல்லது "weather bomb" எனப் அழைக்கப்படுகின்ற இந்தப் பனிப்புயல் மணிக்கு 88 கி.மீ வரை வீசக்கூடும் இதனால் தட்பவெப்பம் அடுத்த 24 மணிநேரத்திற்கு 24 மில்லிபார்ஸ் (Millibars) என்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்குச் செல்லும். மேலும் பனிப்பொழிவு 22 முதல் 30 செ.மீ வரை பெய்யும். மேலும் இந்தப் பனிப்புயலால் மரங்கள் முறிந்து விழுவதுடன் கட்டிடங்களுக்கும் சேதம் உண்டாகலாம். ஏற்கனவே நாட்டின் மூன்றில் ஒரு பகுதி பனியால் உறைந்துள்ளது பாஸ்டன் துறைமுகம் உட்பட.

நம்ம ஊரு புள்ளைங்க ரொம்ப பேரு அமெரிக்காவுல இருக்கீங்க, ரொம்ப கவனமாக இருந்து கொள்வதுடன் ஒருவருக்கொருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு சூழ்நிலைக்கு தக்கவாறு உதவிக் கொள்ளுங்கள், அதேபோல் நம்முடைய மார்க்கம் கற்றுத் தந்துள்ள உதவும் குணத்திற்கு ஏற்றவாறு அக்கம் பக்கத்துல உள்ள மக்களுக்கும் உதவுங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...