Pages

Sunday, January 28, 2018

அமீரகம் ~ சவுதி இணைக்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச சாலையின் பெயர் மாற்றம்!

அதிரை நியூஸ்: ஜன.28
மப்ரக் - குவைபத் (Mafraq - Ghuwaifat) இடையேயான சவுதி செல்லும் சாலை ஷேக் கலீஃபா பின் ஜாயித் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தையும் சவுதி அரேபியாவையும் இணைக்கும் சர்வதேச இருவழிச்சாலை இதுவரை மப்ரக் - குவைபத் சாலை என்றே அழைக்கப்பட்டு வந்தது. 327 கி.மீ தூரமுள்ள இச்சாலையின் 246 கி.மீ தூரங்கள் தற்போது மிக உயர் தரத்தில் சுமார் 5.3 பில்லியன் திர்ஹம் செலவில் மேம்படுத்தப்பட்டு இருபுறமும் தலா 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதை அடுத்து கடந்த புதன்கிழமை முதல் ஷேக் கலீஃபா பின் ஜாயித் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த ஷேக் கலீஃபா சாலை முழுவதும் 8,747 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, இது ஓர் சாதனை அளவாகும். இந்த சாலையில் ஒவ்வொரு லேனிலும் மணிக்கு 2,500 வாகனங்கள் செல்ல முடியும். 16 இன்டெர்சேஞ்சுகள், 10 பெட்ரோல் நிலையங்கள், 33 சாலையோர டிரக் பார்க்கிங் பகுதிகள், குவைபத் அருகில் ஓட்டகங்கள் இருபுறமும் கடந்து செல்ல சுரங்க வழிப் பாதைகள், நீர் தேங்காமலிருக்க வடிகால் திட்டங்கள் என பக்காவாக அமைக்கப்பட்டுள்ளது இந்த சர்வதேச சாலை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...