Pages

Friday, January 19, 2018

பறவை காய்ச்சல் நோய் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (19.01.2018) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் நோய் இல்லை.  பறவை காய்ச்சல் நோய் எங்கேனும் உள்ளதா என்பதை கண்டறிய கால்நடைத்துறை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும். பறவை காய்ச்சல் நோய் பறவையினங்களை தாக்கும் ஒரு வைரஸ் நோயாகும்.  இந்நோய் ஆங்கிலத்தில் Avian Influenza மற்றும் Blue Bird என குறிப்பிடப்படுகிறது. இந்த நோய் கோழியினங்கள், வாத்து, வான்கோழி, நீர் பறவைகள் மற்றும் வன பறவைகள் ஆகியவற்றை தாக்கும். பறவை காய்ச்சல் வைரஸ் கிரிமிகள் பல வகைகள் இருந்தாலும்  H5, N1  என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது.  வைரஸ் காய்ச்சல் நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகளின் கழிவுகள், பண்ணை உபகரணங்கள், முட்டை தட்டு, கோழி தீவனம், தண்ணீர், உடைந்த முட்டைகள் மற்றும் குஞ்சு பொரிப்பு இயந்திரங்கள், பறவை கூண்டுகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் பறவை காய்ச்சல் வைரஸ் சுவாச காற்றின் மூலம் வேமாக பரவும் தன்மை உடையது. 

பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள்  கோழிகளின் தலை மற்றும் கொண்டை வீக்கத்துடன் நீல நிறமாகவும் இருக்கும். சிலிர்ந்த இறகுகள்ää கண்கள் மற்றும் நாசியிலிருந்து நீர்; வடிதல்ää தீவனம் உண்ணாமைää சோர்வுää கழிச்சல் கோழிகளின் கொண்;டை கால் பகுதிகளில் கரும் சிவப்பாக மாறுதல்ää கால்கள் நடக்க முடியாமல் பின்னிக் கொள்ளுதல்ää திடீர் இறப்பு ஏற்படும்.  பறவை காய்ச்சல் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் சுகாதார  தடுப்பு முறைகளை மட்டுமே கையாள வேண்டும்.  வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் இடங்களான பறவைகள் சரணலாயங்களுக்கு அருகில் கோழி அல்லது வாத்து கண்டிப்பாக வளர்க்கக் கூடாது. நாடு விட்டு நாடு பறந்து செல்லும் வனப்பறவைகள் பறவை காய்ச்சல் நோயை பரப்புகின்றன. கோழிப் பண்ணைக்கு இதர கோழிகள் அல்லது வனப்பறவைகள் நுழைவதை தடுக்க வேண்டும். கோழிகள்ää வாத்துகள் மற்றும் வான்கோழி போன்ற பல்வேறு வகை பறவையினங்களை ஒரே பண்ணையில் வைத்து பராமரிப்பதை கோழிப் பண்ணையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

கோழி எச்சம் உள்ள இடங்களில் சிறுவர்களை விளையாடக்கூடாது. கோழி வளரும் இடங்களில் செருப்பு அணியாமல் நடக்க வேண்டாம்.  கோழிக்கூண்டு சுத்தம் செய்யும் போது முக்கின் மீது துணிக்கட்டி முடிக் கொள்ள வேண்டும்.  சுத்தம் செய்த பின்பு கைகளை நன்கு சோப்பு கொண்டு கழுவ வேண்டும். தஞ்சாவ10ர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் இல்லை. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

முழு கோழியை அப்படியே சமைப்பது கூடாது. ஏனெனில் கோழியின் உடலின் அனைத்து பகுதிகளில் வெப்பம் எட்டாமல் போய்விடலாம்.  அரைவேற்காட்டில் சமைத்த கோழி அல்லது முட்டை உண்ணக் கூடாது. பச்சை முட்டை அல்லது அறைவேற்காடு முட்டை சாப்பிடக் கூடாது. முழுமையாக அவித்த முட்டை அல்லது முழுமையாக பொரித்த ஆம்புலேட் மட்டுமே சாப்பிட வேண்டும்.  இவ்வாறு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மாசிலாமணி, அனைத்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குநர் இளங்கோ, ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...