Pages

Wednesday, January 10, 2018

அதிராம்பட்டினம் அருகே கஞ்சா விற்ற பெண் போலீசாரிடம் ஒப்படைப்பு !

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்
அதிராம்பட்டினம், ஜன.10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர் அதிராம்பட்டினம் தமுமுகவினர்.

அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை குப்பம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமையில், தமுமக அதிரை பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுத்தீன் மற்றும் இளைஞர்கள்  சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் துணிப்பை வைத்திருந்த ஒரு பெண்ணை மடக்கி சோதனை நடத்தினர். அவரிடம், 64 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. மேலும் கஞ்சா விற்பனை செய்து ரூ.500 ஆகியவற்றை கைப்பற்றினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி செல்லம்மாள் (வயது 60) என்பது தெரியவந்தது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் போலீசாருக்கு  தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 comment:

  1. We should bring this message to our district Collector attention then only we can banned this sale completely in our area

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...