Pages

Thursday, January 4, 2018

அதிராம்பட்டினம் சாலையில் மணல் அகற்றும் பணி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பேருந்து நிலையம் தொடங்கி பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் குவிந்து காணப்பட்ட மணலை அப்புறப்படுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் தொடங்கி பட்டுக்கோட்டை செல்லும் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே குவிந்து காணப்படும் மணலால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில், சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன், துப்புரவுப் பணி கண்காணிப்பாளர் முத்துகுமார் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் 15 க்கும் மேற்பட்டோர், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் தொடங்கி, பட்டுக்கோட்டை சாலை இந்தியன் வங்கி வரை சாலையின் இருபுறமும் குவிந்து காணப்பட்ட மணலை அகற்றும் பணியில் இன்று வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...