Pages

Thursday, January 18, 2018

பேரிடர் காலங்களில் தஞ்சை மாவட்ட கடற்கரை கிராமங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் மாவட்ட கடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (18.1.2018) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்  தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983ன்படி தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி விசைபடகுகள், கடல்களில் மீன்பிடிக்கப்படுகிறதா என்பதை கடலோர பாதுகாப்பு குழுமம் படகில் ரோந்து பணியின் ஈடுபடும் போது  அவர்களுடன் மீன்வளத் துறை அலுவலர்களும் சென்று ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும்.  வானிலை குறித்த தகவல்களை அனைத்து மீனவ கிராமங்கள் மற்றும் மீனவர்களுக்கும் தினமும் மீன்வளத்துறையினர் தெரிவிக்க வேண்டும்.

பேரிடர் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக கடற்கரை கிராமங்களில் 5 கிராமங்களுக்கு ஓரிடத்தில் மருத்துவ வசதியுடன் கூடிய ஆம்புலென்ஸ் நிறுத்தி வைக்க வேண்டும்.

மல்லிப்பட்டிணம் மற்றும் சேதுபாவாசத்திரம் படகு இறகு தளங்களை மேலும் விரிவுப்படுத்தி அதில் சூரிய சக்தி மூலம் விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் மீனவர்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார்,  உதவி இயக்குநர் ஊராட்சிகள் முருகேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மீன்வளத்துறை அலுவலர்கள்,  பொதுப்பணித்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...