Pages

Saturday, January 6, 2018

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவை பள்ளிச்செயலர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார். விழாவில்,
ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு 16 பானைகளில் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பானை உடைத்தல், மூன்று கால் ஓட்டம், கோலம் போடுதல், லக்கி கார்னர் ஆகிய போட்டிகளில் பள்ளி ஆசிரியைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. பரிசுகளை பள்ளி முதல்வர் என். உதயகுமார் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக, மாணவர்களிடையே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேராசிரியர் என். சேகர் பொங்கல் பண்டிகை சிறப்பு குறித்து உரை நிகழ்த்தினார். விழா முடிவில், பள்ளி முதுகலை ஆசிரியர் ஆர். போஸ்ராஜா நன்றி கூறினார்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...