Pages

Sunday, January 14, 2018

விரைவில் துபை பிரேம் நுழைவு கட்டணத்திலேயே ஜபீல் பார்க் அனுமதி இலவசம்!

அதிரை நியூஸ்: ஜன.14
விரைவில் துபை பிரேம் நுழைவு கட்டணத்திலேயே ஜபீல் பார்க் அனுமதி இலவசம்.

துபையின் புதிய சுற்றுலா ஈர்ப்பான துபை பிரேம் கட்டிடத்தை தினமும் சராசரியாக 1,800 மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்து வருகின்றனர். மொத்தமாக ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதுவரை 25,000க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.துபை பிரேம் கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்களுக்கு மேல் பார்வையிட அனுமதியில்லை. துபை பிரேமில் தினமும் காலை 10 மணிமுதல் 7 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

துபை பிரேம் பில்டிங் செல்வோர் ஜபீல் பார்க்கின் கேட் நம்பர் 4 வழியாகவே செல்ல முடியும் இதனால் ஜபீல் பார்க் நுழைவு கட்டணமாக 5 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது. விரைவில் இந்த ஜபீல் பார்க் நுழைவு கட்டணம் துபை பிரேம் பில்டிங் செல்லும் பார்வையாளர்களுக்கு மட்டும் ரத்து செய்யப்படவுள்ளதால் இனி அவர்கள் இலவசமாக ஜபீல் பார்க்கையும் சுற்றிப் பார்க்கலாம். தற்போது துபை பிரேம் பில்டிங் அனுமதி கட்டணமாக பெரியவர்களுக்கு 50 திர்ஹமும், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 20 திர்ஹமும் வசூலிக்கப்படுகிறது. விரைவில் ஆன்லைன் டிக்கெட் வழங்கும் வசதியும் ஆரம்பமாகவுள்ளது.

துபை பிரேம் கட்டிடத்தில் செய்யக்கூடாத / அனுமதியில்லாத காரியங்கள்:
1. உணவு / பானங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை (ஆனால் உச்சியில் கடைகள் உண்டு)
2. ஸ்ட்ரோலர் எனப்படும் குழந்தைகளுக்கான தள்ளு வண்டிகள் மற்றும் பெரிய சைஸ் பைகள்
3. பொம்மைகள் மற்றும் கூரான கருவிகள்
4. வளர்ப்புப் பிராணிகள்
5. புகைப் பிடித்தல்
6. அரைகுறை / ஆபாச உடைகள்
7. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொடுவது மற்றும் எடுப்பது
8. அங்குள்ள கைப்பிடிகளில் சாய்வது, தொங்குவது உள்ளிட்டவை
9. கைப்பிடிகளின் மீது குழந்தைகளை அமர வைப்பது, விளையாடச் செய்வது
10. 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை கவனமுடன் கவனித்துக் கொள்ளலாமல் பொறுப்பின்றி தனியே விட்டுச் செல்வது.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...