Pages

Thursday, January 11, 2018

அதிராம்பட்டினம் ரயில் நிலைய மேற்கூரைகள் அமைக்கும் பணி தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.11
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணி கடந்த ஜூலை 3 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டிடம், டிக்கெட் கவுண்டர், பயணியர் ஓய்வு அறை என பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும் பணிக்கு மொத்தம் 100 டன் எடை இரும்பு பயன்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 50 டன் இரும்பில், மேற்கூரை அமைக்கும் பணிகள் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது பிளாட் பாரம் ஆகியவற்றை இணைக்கும்  படிக்கட்டு நடைமேடை மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், 1-வது பிளாட் பாரத்தில், தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்காக 15 ஊழியர்கள் வெல்டிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் மார்ச் 2-வது வாரத்தில், இப்பணிகள் அனைத்தும் நிறைவு பெரும் என கூறப்படுகிறது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...