Pages

Saturday, January 13, 2018

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பொங்கல் கோலப் போட்டி !

அதிராம்பட்டினம், ஜன.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில், பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில், தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை புகையில்லா பண்டிகையாக கொண்டாடும் விதமாக, மகளிர் சுய உதவிக்குழுவினர் இடையிலான கோலப்போட்டி நடைபெற்றது. இதில், 10 பேர் கலந்துகொண்டு பல்வேறு வண்ணங்களில் கோலமிட்டனர். இதில், முதலிடம் பிடித்த சசிகலா என்பவருக்கு, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். அருகில், துப்புரவுப் பணி கண்காணிப்பாளர் முத்துகுமார் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...