Pages

Friday, January 5, 2018

வார இறுதிக்கான அமீரக வானிலை முன்னறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஜன.05
அமீரகத்தின் பல பகுதிகளிலும் இருண்ட வானமும், பலத்த காற்றும், உயர அலைகளும் வீசும் என ஆரஞ்சு வண்ண (Orange Alert) முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது அமீரக வானிலை மையம் (NCM).

அமீரகத்தில் முன் எச்சரிக்கை இரு (Be Aware) என்பதற்கு மஞ்சள் வண்ணமும், கூடுதல் ஆயத்தமாக இரு (Be Prepared) என்பதற்கு ஆரஞ்சு வண்ணமும், உடன் நடவடிக்கை எடு என்பதற்கு சிவப்பு வண்ணமும் (Take Action) வானிலை மையத்தின் குறியீடுகளாக விளங்குகின்றன.

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் அதேவேளையில் நிலப்பகுதிகளில் மணிக்கு 14 முதல் 24 கி.மீ வேகத்தில் காற்று வீசும், கடலில் மணிக்கு 18 முதல் 24 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மணிக்கு 38 கி.மீ வரை உயரக்கூடும் என்பதால் அரேபிய வளைகுடா கடலில் 6 முதல் 8 அடி வரையும், ஓமன் கடலில் 5 முதல் 7 அடி வரையும் அலைகள் எழும் என்பதால் கடற்கரை பிரதேசங்கள் மற்றும் ஆழ்கடலில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஈரப்பதம் நிலவுவதுடன் பனி படர்ந்தும் காணப்படும். மலை பிரதேசங்களில் 8 முதல் 20 டிகிரி வரையும், நாட்டின் உட்பகுதியில் 12 முதல் 28 டிகிரி வரையும், கடற்கரையோர பிரதேசங்களில் 13 முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வரை நிலவும்.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...