Pages

Saturday, January 6, 2018

சவுதி ரியாத்தில் 'ஈத்மிலன்' நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன.06
இந்தியா ஃப்ரேடர்னிடி ஃபாரம் ரியாத் தமிழ் பிரிவு சார்பாக "ஈத் மிலன்" சமூக நல்லிணக்க நிகழ்ச்சி, கடந்த டிச.22 ந் தேதி பத்தாஹ்விலுள்ள ஷிஃபா அல்ஜஸீரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஃப்ரேடர்னிட்டி ஃபாரம் செயலாளர் ரம்ஜூதீன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஃப்ரேடர்னிட்டி ஃபாரம் மாவட்டத் தலைவர் முத்து அகமது தலைமை தாங்கினார். ஜாலியாத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அழைப்பாளர் மெளலவி ஷர்ஃபுதீன் இஸ்லாம் குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், இஸ்லாம் மார்க்கம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு ஃப்ரேடர்னிட்டி ஃபாரம் ரியாத் மண்டல செயலாளர் முகமது ராஃபி பதில் அளித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டு, நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில், ஃப்ரேடர்னிட்டி ஃபாரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறியாளர் ரஷீத்கான் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...