Pages

Wednesday, January 10, 2018

பட்டுக்கோட்டை ~ அதிராம்பட்டினம் ரயில் வழித்தடத்தில் புதிய தண்டவாளம் பொருத்தும் பணி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.10
பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி வரையிலான ரயில் வழித்தடத்தில்  புதிய தண்டவாளம் பொருத்தும் பணி இன்று புதன்கிழமை தொடங்கியது.

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பட்டுக்கோட்டை முதல் பள்ளிக்கொண்டான் வரையிலான பாதையில் டெல்லியிலிருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட  360 மீட்டர் நீளமுள்ள புதிய தண்டவாளங்கள் இப்பாதையில் இறக்கி வைக்கப்பட்டன. இப்பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இப்பாதையில் ஏற்கனவே தற்காலிகமாக பொருத்தப்பட்டு இருந்த தண்டவாளங்களை அகற்றிவிட்டு, புதிய தண்டவாளங்கள் பொருத்தப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி வரையிலான ரயில் வழித்தடத்தில், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி ஆகியப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள், நடை மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில், 126 சிறிய பாலங்கள், 10 பெரிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...