Pages

Sunday, January 21, 2018

தஞ்சையி்லிருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் புதிய கட்டண விவரம்!

தஞ்சை பழைய பேருந்து நிலையம் கருப்பு - வெள்ளை படம்
தஞ்சாவூரில் 30 கி.மீ. சுற்றளவில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்சமாக ரூ. 5 என்றும், அதிகபட்சமாக ரூ. 13 ஆகவும் இருந்தது. இப்போது, கட்டண உயர்வால் அதிகபட்சமாக ரூ. 13-இல் இருந்து ரூ. 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 5 ஆக இருந்த கட்டணம் ரூ. 10 ஆகவும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு ரூ. 7 என இருந்த கட்டணம் இப்போது ரூ. 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வெளியூர் பேருந்துகள் (அடைப்புக்குள் பழைய கட்டணம்): இதேபோல, தஞ்சாவூர் - திருச்சி ரூ. 51 (ரூ. 31), தஞ்சாவூர் - புதுக்கோட்டை ரூ. 48 (ரூ. 33), தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரூ. 48 (ரூ. 33), தஞ்சாவூர் - கும்பகோணம் ரூ. 43 (ரூ. 29), தஞ்சாவூர் - மதுரை ரூ. 133 (ரூ. 90), தஞ்சாவூர் - திருவாரூர் ரூ. 60 (ரூ. 42), தஞ்சாவூர் - நாகை ரூ. 83 (ரூ. 51), தஞ்சாவூர் - வேளாங்கண்ணி ரூ. 95 (ரூ. 62), தஞ்சாவூர் - மயிலாடுதுறை ரூ. 67 (ரூ. 50), தஞ்சாவூர் - வேலூர் ரூ. 260 (ரூ. 190, தஞ்சாவூர் - சென்னை ரூ. 313 (ரூ. 200).

விரைவுப் பேருந்துகள் (அடைப்புக்குள் பழைய கட்டணம்): 
தஞ்சாவூர் - சென்னை ரூ. 394 (ரூ. 250), தஞ்சாவூர் - பெங்களூரு ரூ. 555 (ரூ.395), தஞ்சாவூர் - ஒசூர் ரூ. 414 (ரூ.270), தஞ்சாவூர் - திருப்பதி ரூ. 485 (ரூ. 355), தஞ்சாவூர் - வேலூர் ரூ. 355 (ரூ.225).

இந்தப் புதிய கட்டண விவரம் சனிக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...