Pages

Monday, January 15, 2018

மார்ஸ் கிரகத்தில் ஆழமான பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: ஜன. 15
செவ்வாய் கிரகம் என அழைக்கப்படும் கிரகத்தில் சுமார் 1 மீட்டர் முதல் 100 மீட்டர் ஆழம் வரை படிப்படியாக உருவான பனிப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பனிப்பாறைகள் மார்ஸ் கிரகத்தின் 3ல் 1 பகுதியில் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் மேலும் பல புதிய ஆராய்ச்சிகளுக்கான வாயில்கள் திறந்து விடப்பட்டுள்ளன.

கண்ணாடி போல் மிகத் தெளிவாக தரை தளம் வரை ஊடுருவி பார்க்கும் வண்ணம் அமைந்துள்ள இத்தகைய பனிப்பாறைகள் மார்ஸ் கிரகம் முழுவதும் இதுவரை சுமார் 8 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பனிப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்நிலையில், மார்ஸின் தண்ணீர் எங்கு செல்கின்றன? எப்போது உறைகின்றன? எப்போது உருகுகின்றன? என்பதெல்லாம் ஆராயப்பட வேண்டிய நீண்ட தொடர்கதை என நாஸா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையம் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு மார்ஸ் கிரகத்திற்கு முதலாவதாக விண்வெளி வீரர்களை அனுப்பப் திட்டமிட்டுள்ளது.

Source: AFP / Emirates 247
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...