Pages

Sunday, January 14, 2018

உலகம் சுற்றும் டீக்கடை முதலாளி !

அதிரை நியூஸ்: ஜன.14
இந்தியாவில் டீ கடை நடத்துவது என்பதும் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தது போல. பிரதமர், முதலமைச்சர் என தந்த டீக்கடை தற்போது உலகம் சுற்றும் வயதான கேரள தம்பதியர் ஒருவரையும் தந்துள்ளது தெரிய வந்துள்ளது.

67 வயது கே.ஆர்.விஜயனும் அவரது 65 வயது மனைவி மோகனாவும் இதுவரை 5 கண்டங்களில் உள்ள (அமீரகம் உட்பட) 18 நாடுகளையும் 5 உலக அதிசயங்களையும் சுற்றிப்பார்த்துள்ளனர். தங்களின் அடுத்த இலக்காக சீனா செல்ல திட்டமிட்டுள்ளதுடன் தங்களின் வாழ்நாள் கனவாக அண்டார்டிகா பனிப்பிரதேசம் செல்ல வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மிகச்சாதாரண டீக்கடை ஒன்றை சுமார் 40 வருடங்களாக கொச்சியில் நடத்தி வரும் இத்தம்பதிக்கு 2 பெண் வாரிசுகள், இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் என செட்டில் ஆன பின்பே இவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லத் துவங்கியுள்ளனர். தனது மகள்களை சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவிற்கு மட்டுமே அழைத்துச் சென்றுள்ளதாக கூறும் விஜயன் அடுத்த முறை துபை வரும் போது தனது மகள்களையும், பேரக்குழந்தைகளையும் உடன் அழைத்து வருவேன் என்றும் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஜோர்டான், எகிப்து, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு 18 நாள் டிரிப்பில் செல்லும் வழியில் துபை வந்துள்ளார் அதன்பின் தற்போது தான் 3 இரவுகள் 4 தினங்கள் கொண்ட தனி டிரிப்பில் துபை வந்து திரும்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு வியக்கும் விஜயன் தம்பதியர் மீண்டும் தங்களுடைய சொந்த செலவில் துபைக்கு வருவோம் என நம்பிக்கை தெரிவித்தனர். இம்முறை ஒரு  தனியார் டிராவல் நிறுவனம் வழங்கிய இலவச சலுகையில் வந்து சென்றுள்ளார்.

பெரும்பாலும் தனது டீக்கடை வருமானத்திலிருந்து சேமிக்கப்படும் தொகையை கொண்டே பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். ஒருமுறை இவர் அமெரிக்கா செல்ல விரும்பம் தெரிவித்ததை அடுத்து இந்திய பிரபலங்களான அமிதாப் பச்சன், அனுபம் கெர், சசி தரூர் போன்ற பலரின் உதவியுடன் அமெரிக்கா சென்றும் வந்துள்ளார். இவரைப் பற்றி Invisible Wings என்ற ஒரு டாக்குமெண்டரி படமும் வெளிவந்து பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளதாம்.

எந்த தேசத்திற்கு சென்றாலும் கேரள பாரம்பரிய கலாச்சார உடைகளான முண்டு, கைலி, சேலை அணிந்து செல்வதில் இதுவரை சமரசம் செய்து கொண்டதே இல்லையாம்.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...