Pages

Wednesday, January 3, 2018

சவுதியில் தனது உயிரை பணயம் வைத்து சிறுவனின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்!

அதிரை நியூஸ்: ஜன.03
சவுதியில் தனது உயிரை பணயம் வைத்து சிறுவனின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

சவுதி அரேபியாவின் ஹாயில் பிரதேசத்தில் Ha'il governorate) ஒரு அப்பார்ட்மெண்டில் ஏற்பட்ட தீவிபத்தால் சூழ்ந்த புகையால் ஒரு குழந்தை மூச்சுத்திணறலால் மயங்கியது.

இத்தீவிபத்தை தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத்துறை வீரர் மிஷால் அல் இணைஸி (Mishal Al Enezi) அவர்கள் சமயோசிதமாக அதேவேளை தனது உயிரை பணயம் வைத்தவராக தனது ஆக்ஸிஜன் முகமூடியை எடுத்து அக்குழந்தையின் முகத்திற்கு மாற்றினார்.

மிஷால் அல் இணைஸி அவர்களின் தீரத்தால் குழந்தையின் உயிர் காப்பற்றப்பட்டது எனினும் அவர் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறி சரிந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இணைஸி அவர்களின் தியாகம் குறித்து அறிந்த அரசு அவரை உடனடியாக தலைநகர் ரியாத் மருத்துவமனைக்கு மாற்றி சிறப்புச் சிகிச்சையளித்து வருகிறது.

தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக அவரது உறவினர் ஒருவர் அல் ரோட்டனா தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மிஷால் அல் இணைஸி அவர்களின் தியாகச்செயல் பற்றி சமூக வலைத்தளங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் சவுதி அரேபியாவின் இளம் ஹீரோக்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். சவுதியில் ஹீரோக்கள் தியேட்டரில் உருவாவதில்லை ஆனால் நாசகர தியேட்டர்கள் உருவாகிக் கொண்டுள்ளன.

Source: StepFeed / Msn
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...