Pages

Friday, January 5, 2018

பட்டுக்கோட்டையில் 'முத்தலாக்' தடை சட்ட மசோதாவை எதிர்த்து பிரமாண்ட கண்டனப் பொதுக்கூட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜன.05
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள், இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து 'முத்தலாக்' தடை சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம், பட்டுக்கோட்டை தலைமைத் தபால் நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஜமாஅத்துல் உலமா சபை தஞ்சை மாவட்ட செயலாளர் மவ்லவி எஸ், அய்யூப்கான் மன்பஈ தலைமை வகித்தார். மவ்லவி ஏ,முஹம்மது ரஹ்மானி கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், தமுமுக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் கோவை செய்யது, அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை மாவட்டச் செயலாளர் ஏ. ஹாஜா அலாவுதீன், மனிதநேய ஜனநாயக் கட்சி மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் சமீம் அகமது, பட்டுக்கோட்டை மணிக்குண்டு பள்ளிவாசல் இமாம் மவ்லவி ஜாஹிர் ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்

கூட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டார அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமுமுக, மமக, எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ, மஜக ஆகிய இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'முத்தலாக்' தடை சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தொடக்கத்தில், பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேசன் பள்ளிவாசல் இமாம்
மவ்லவி ஏ.கே இர்பானுல்லா மன்பஈ வரவேற்றுப் பேசினார். பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளிவாசல் இமாம் மவ்லவி எஸ், பீர்முகமது பைஜி தொகுப்புரை வழங்கினார். கூட்ட முடிவில், பட்டுக்கோட்டை மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் இமாம் மவ்லவி அப்துல் ஹமீது நன்றி கூறினார்.
 
 
 
 
   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...