Pages

Friday, January 19, 2018

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு  குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (19.01.2018) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகள் நலக்குழுவின் ஆணை பெற்ற பிறகே குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் நலக்குழு ஆணை இல்லாமல் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை வைத்திருந்ததாக கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றால் பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

குழந்தைகள் கொத்தடிமைகளாக வேலை வாங்குவதும் குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வித்துறையின் சார்பில் 9, 10, 11, 12ம் வகுப்புகளில் குழந்தை திருமணம் குறித்தும், குழந்தை திருமணம் செய்வதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்களில் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நடராஜன், ஊராட்சி உதவி இயக்குநர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, குழந்தை நலக்குழுதலைவர் மற்றும் உறுப்பினர், அனைத்துத்துறை அலுவலர்கள்  ஆகியோர்; கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...