Pages

Friday, January 5, 2018

துபை நகீல் ஹார்பர் & டவர் மெட்ரோ ஸ்டேஷன் இன்று முதல் தற்காலிகமாக மூடல்!

அதிரை நியூஸ்: ஜன.05
துபையில் நகீல் ஹார்பர் & டவர் மெட்ரோ ஸ்டேஷன் இன்று ஜன.05 முதல் 1 ½ வருடங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

துபையில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 'துபை எக்ஸ்போ 2020' நிகழ்வுக்காகவும் அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் ஏற்படவுள்ள வளர்ச்சிப்பணிகளை கருத்திற்கொண்டும் புதிதாக ரூட் 2020 (Route 2020) எனும் மெட்ரோ லைன் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மெட்ரோ லைன் ரெட் லைன் மெட்ரோவுடன் 'நகீல் ஹார்பர் & டவர்' மெட்ரோ ஸ்டேஷனுடன் (ஸ்டேஷன் எண்: 38) இணைக்கப்படுகிறது.

இந்த ஸ்டேஷன் ஒரு ஜங்ஷன் நிலையமாக செயல்படவுள்ளதாலும் அதன் அருகாமையிலேயே அடுக்குமாடிகளில் பிரம்மாண்ட எனும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாலும் நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) முதல் இந்த ஸ்டேஷன் தற்காலிகமாக அடுத்த (2019) ஆண்டு மத்தி வரை மூடப்படுகின்றது.

யுஏஈ எக்ஸ்சேஞ்ச் நிலையத்திலிருந்து இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் இப்னு பதூதா  மெட்ரோ ஸ்டேஷனுடன் நிறுத்தப்படும். அங்கிருந்து இலவச பஸ் சேவை (ஷட்டில் சர்வீஸ்) மூலம் ஜூமைரா லேக் டவர்ஸ் மெட்ரோ நிலையத்திற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். அங்கிருந்து பயணிகள் தொடர்ந்து ராஷிதியா மார்க்கத்தில் மெட்ரோ பயணத்தை தொடரலாம்.

அதேபோல் மறுமார்க்கத்தில் ஜூமைரா லேக் டவர்ஸ் நிலையத்தில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டு இலவச ஷட்டில் பஸ் சேவை மூலமாக இப்னு பதூதா மெட்ரோ ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கிருந்து பயணிகள் யுஏஈ எக்ஸ்சேஞ்ச் மார்க்கத்தில் பயணத்தை தொடரலாம் என துபை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...