Pages

Wednesday, January 10, 2018

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் (படங்கள்)

பேராவூரணி ஜன.10
பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி தரம் மேம்படுத்தப்பட்ட அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கர்ப்பிணி தாய்மார்கள், அதிகம் கவனிக்கப்பட வேண்டிய தாய்மார்கள், 2 குழந்தைகளுக்கு மேல் உள்ள தாய்மார்கள் ஆகியோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய் அன்று  நடைபெற்றது.

இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தரராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக குழந்தை நல மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் அன்பழகன், ஹாஜாமைதீன், மகப்பேறு மருத்துவ அலுவலர் இர்ஷாத் நஸ்ரின் ஆகியோர் பங்கேற்றனர்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்குதல், தாய்ப்பால், 
இயற்கை காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி,
கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கப்பட்டு, ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது.

திருச்சிற்றம்பலம் பெருநிலக்கிழார் என்.சண்முகானந்தன், மருத்துவ அலுவலர்கள் அறிவானந்தம், தீபா, சிவரஞ்சனி, கோகிலம், ஹம்ஷவேணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கண்ணன், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர், சமூக சுகாதார செவிலியர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகாதார நிலைய வளாகத்தில் விளைந்த இயற்கை காய்கறிகள் வழங்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...