Pages

Monday, January 8, 2018

துபையில் பழைய கார்களை வாங்குவோருக்கு விபரங்களை தந்து உதவும் கட்டணத் திட்டம் அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஜன.08
துபையில் பழைய கார்களை வாங்குவோருக்கு விபரங்களை தந்து உதவும் கட்டணத் திட்டம் அறிமுகம்

துபையில் பிற கார் உரிமையாளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் (2nd hand cars) மற்றும் இறக்குமதி செய்யப்படும் பழைய கார்களின் (Imported 2nd hand cars) விபரங்களை அந்த உர்மையாளர்களின் ஒப்புதலுடன் தந்து உதவும் திட்டத்தை துபை போக்குவரத்து துறை (IRTA) அறிமுகப்படுத்தி உள்ளது.

100 திர்ஹம் செலுத்தினால் நீங்கள் வாங்க விரும்பும் பழைய கார் குறித்த முக்கியமான சில விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இதற்கு ‘Vehicle Condition Certificate’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த கார் பயணம் செய்துள்ள தூரம், பழைய உரிமையாளர்கள் குறித்த முக்கிய விபரங்கள், கடைசியாக நடத்தப்பட்ட வருடாந்திர வாகன சோதனையின் (Annual vehicle test) போது இருந்த அந்த காரின் நிலை மற்றும் எத்தனை முறை போக்குவரத்து விதிமீறலுக்காக பிடித்து வைக்கப்பட்டது என்பன போன்ற முக்கிய விபரங்களை அந்த கார் உர்மையாளரின் ஒப்புதலுடன் தரப்படும்.

துபை போக்குவரத்துத் துறையின் இணைய தளத்தின் (RTA website - www.rta.ae) வழியாக தாங்கள் வாங்க விரும்பும் பழைய காரின் சேஸ் எண்ணை (chassis number) விண்ணப்பப் படிவத்தில் பதிந்தால் அது பற்றிய விபரங்களை துபை போக்குவரத்து துறை பெற்றுத் தரும், 100 திர்ஹம் கட்டணம் செலுத்திய பின். இறக்குமதி செய்யப்படும் கார்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள இன்னும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...