Pages

Wednesday, January 3, 2018

விமானத்தின் எமர்ஜென்ஸி கதவு வழியாக வெளியே குதித்த பயணி கைது!

அதிரை நியூஸ்: ஜன.03
ஸ்பெயினில் விமானத்திலிருந்து இறங்க தாமதமானதால் எமர்ஜென்ஸி கதவு வழியாக வெளியே குதித்த பயணி கைது செய்யப்பட்டார்.

ஸ்பெயின் நாட்டின் மலாகா விமான நிலையத்திற்கு சுமார் 1 மணிநேர தாமதத்துடன் வந்து சேர்ந்தது ரியான் ஏர்விமானம் மேலும் விமானத்திலிருந்து இறங்க சுமார் 30 நிமிடங்கள் ஆனதால் கடுப்பான பயணி ஒருவர் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறந்து விமான இறக்கையின் மீதேறி வெளியே குதித்தார்.

ஸ்பெயின் விமான நிலைய பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக அந்தப் பயணியை கைது செய்த போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். விமானம் தரையிறங்கி விட்டதால் அதன் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் ஸ்பெயின் போலீஸார் வசம் சென்றுவிடுகின்றன என்பதால் எங்களுக்கு இனி சம்பந்தமில்லை என ரியான் ஏர் விமான நிறுவனம் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டது.

Source: Sky News / Msn
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...