Pages

Tuesday, January 16, 2018

ஓமனில் குறிப்பிட்ட சில சேவைகளின் மீது புதிய வரிகள் விதிப்பு!

அதிரை நியூஸ்: ஜன.16
கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஓமனும் ஒன்று. எனவே இங்கு பற்றாக்குறை பட்ஜெட் போடும் நிலை ஏற்பட்டதால் சில மானியங்களை ரத்து செய்தும் சில வரிகளை உயர்த்தியும் சமாளித்து வந்தனர். இந்நிலையில் மின்சாரம், சர்வதேச தர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள் சிலவற்றிற்கு வரிகளை உயர்த்தியுள்ளனர்.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல், 25 ஓமன் ரியால்களுக்கு கீழ் வரும் மின்சாரக் கட்டணங்கள் மீது 0.5% வரியும், 26 முதல் 50 ஓமன் ரியால்களுக்குள் வரும் மின் கட்டணங்கள் மீது 1% வரியும், 50 ஓமன் ரியால்களுக்கு மேல் வரும் அனைத்து மின் கட்டணங்கள் மீதும் 2% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சர்வதேச தர ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையங்களின் மீதும் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்காணும் இடங்களில் செயல்படும் பொழுது போக்கு மையங்கள், அரங்குகள், விளையாட்டு மன்றங்கள், சினிமா, மேடைக்கச்சேரிகள் மற்றும் அருங்காட்சியகங்களில் கொடுக்கப்படும் டிக்கெட்டுகளின் மீது 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் தர ஹோட்டல்கள், ஹோட்டல் அப்பார்ட்மெண்ட்டுகள், பர்னிஷ்டு அப்பார்ட்மெண்ட்டுகள், இளைஞர் விடுதிகள், முகாம்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கார் பார்க்குகள், டிரைலர்கள், உணவகங்கள், சர்வதேச தர காபி நிலையங்கள் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களின் மீதும் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் பொறுங்க.... ஆங், இதற்கு மேலும் எதிர்வரும் 2019 ஆண்டு முதல் சவுதி, அமீரகத்தில் விதிக்கப்பட்டுள்ளது போல் 5% வாட் வரியும் வாட்ட வருகிறது.

Sources: Gulfbusiness.com / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...