Pages

Wednesday, January 17, 2018

பெட்ரோல் விலை உயர்வதால் ஓமன் நாட்டின் பொருளாதாரம் உயரும் ~ நிபுணர்கள் கணிப்பு!

அதிரை நியூஸ்: ஜன.17
பெட்ரோல் விலை உயர்வதால் ஓமன் நாட்டின் பொருளாதாரம் உயரும் என நிபுணர்கள் கணிப்பு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரத் துவங்கியுள்ளதுடன் அது மீண்டும்; விரைவில் சரியும் வாய்ப்புக்கள் இல்லை என நிபுணர்களால் கருதப்படுவதாலும் ஓமனின் பொருளாதார தேக்கங்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது. ஓமனின் மொத்த வருவாயில் 71 சதவிகிதம் பெட்ரோலிய ஏற்றுமதி மூலமே கிடைக்கின்றது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று சுமார் 65 முதல் 70 டாலர்கள் வரை விலை போய் கொண்டுள்ளன ஆனால் ஓமனில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோலின் விலை ஏற்ற இறக்கங்களை எதிர்பார்த்தவர்களாக பேரல் ஒன்று 50 டாலர்கள் என குறைத்து கணக்கிடப்பட்டே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் குறைந்தபட்சம் பேரல் 65 டாலர்கள் என்ற நிலையை எட்டியுள்ளதால் மிதமிஞ்சிய பொருளாதார வருவாய் கிடைக்கும் என சர்வதேச பொருளாதார நிபுணர்களால் நம்பப்படுகிறது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...