Pages

Saturday, January 6, 2018

'முத்தலாக்' தடை சட்ட மசோதா கண்டனப் பொதுக்கூட்டத்தில் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்ட PFI (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜன.06
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள், இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து 'முத்தலாக்' தடை சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம், பட்டுக்கோட்டை தலைமைத் தபால் நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டார அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமுமுக, மமக, எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ, மஜக ஆகிய இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'முத்தலாக்' தடை சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தன்னார்வலர்கள் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தல், பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு இடையூறு இல்லாமல் வாகன போக்குவரத்தை சீர் செய்தல், கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், தேனீர் விநியோகம் போன்ற பணிகளில் தாமாக முன்வந்து ஈடுபட்டனர். இவர்களது தன்னார்வப் பணிகளை ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...