Pages

Monday, February 5, 2018

கல்லூரிக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மேஜை நாற்காலி வழங்கல்!

பேராவூரணி பிப்.05
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ 15 இலட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வழங்கினார்.

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் திங்களன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கிளாடிஸ் தலைமை வகித்தார். கல்லூரி கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் ராணி வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 14 இலட்சத்து 47 ஆயிரத்து 750 மதிப்பிலான டேபிள், சேர், பீரோ உள்ளிட்ட 95 பொருட்களை வழங்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில கயறு வாரியத்தலைவர் நீலகண்டன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் நாடியம் சிவ.மதிவாணன், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் எம்.சுந்தர்ராஜன், ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.எம்.நீலகண்டன், ஒப்பந்ததாரர் இரா.சங்கர், பொறியாளர்  மா.கோ.இளங்கோ, கணேசன், பேராசிரியர் ராஜ்மோகன், பழனிவேலு, முத்துக்கிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...