Pages

Thursday, February 1, 2018

150 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் இருந்து தங்கப் புதையல் மீட்பு!

அதிரை நியூஸ்: பிப்.01
1857 ஆம் ஆண்டு எஸ்.எஸ். சென்ட்ரல் அமெரிக்கா எனும் கப்பல் தெற்கு கரோலினா கடற்பகுதியில் பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் புயலில் சிக்கி மூழ்கிய போது அதில் பயணம் செய்த சுமார் 425 பேருடன் கலிபோர்னியா அரசுக்கு சொந்தமான தங்கக் குவியலும் சேர்ந்து கடலில் ஜலசமாதியானது.

இந்த கப்பல் புதையலை தேடி புதையல் வேட்டைக்காரர்கள் முயற்சித்ததன் விளைவாக 1988 ஆம் ஆண்டு 2,134 மீட்டர் கடலடி ஆழத்தில் புதையுண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 3,100 தங்க நாணயங்கள் மற்றும் 45 தங்க பாளங்கள் உட்பட 36 கிலோ தங்கமும் 2-வது முறையாக மீட்கப்பட்டன. முதன்முறை எத்தனை கிலோ தங்கம் மீட்கப்பட்டன என்பது மர்மமாகவுள்ளது.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கவனமுடன் கைகளால் சுத்தப்படுத்தப்பட்டு பழைய தோற்றத்தை பெற்றுள்ள தங்கம் அனைத்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன. இதன் வரலாறு மற்றும் பழமையின் காரணமாக ஒரு சிறிய நாயணம் கூட 1 மில்லியன் டாலர் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தங்கப் புதையலை கண்டுபிடித்த, ஓஹியோவைச் சேர்ந்த புதையல் வேட்டைக்காரர் டோமி தாம்ப்ஸன் என்பவர் சுமார் 161 முதலீட்டாளர்களிடம் 13 மில்லியன் டாலர்களை திரட்டினார். முதன்முறையாக மீட்கப்பட்ட தங்கத்திலிருந்து சுமார் 532 தங்க பாளங்களையும் சுமார் 500 நாணயங்களையும் 2000 ஆம் ஆண்டுவாக்கில் 50 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ததுடன் கணக்கில் காட்டாமலும் பல ஆயிரம் நாணயங்களை விற்பனை செய்துள்ளார்.

இந்தப் புதையல் வேட்டை தொடர்பான வழக்கில் நாணயங்கள் குறித்து கணக்கு கேட்ட நீதிமன்றத்திடம் வாய் திறக்க மறுத்தார். மேலும் தங்க விற்பனை மூலம் கிடைத்த 50 மில்லியன் டாலர்களும் வழக்கு மற்றும் பேங்க் லோன்களை அடைக்க செலவு செய்துவிட்டதாக கணக்கு காட்டினார்.

2005 ஆம் தலைமறைவான தாம்ப்ஸனுக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது வரை ஜெயிலில் உள்ளார்.

2 வது முறையாக சென்று மீட்கப்பட்ட 36 கிலோ தங்கம் தற்போது விற்பனைக்கு வருவதன் மூலம் தாம்ப்ஸனிடம் 1980 ஆம் ஆண்டுகளில் முதலீடு செய்த அந்த 161 முதலீட்டாளர்களுக்கும் பங்கு கிடைக்கவுள்ளது என்றாலும் அவர்களில் பல முதலீட்டாளர்கள் இறந்தும் போய்விட்டனர், எஞ்சியிருப்பவர்கள் அனுபவிக்க முடியாத வயதை அடைந்துவிட்டனர் என்பது தான் சோகம்.

எதிர்வரும் பிப்ரவரி 22 முதல் 24 வரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லாங் பீச் கன்வென்சன் சென்டரில் விற்பனை மற்றும் கண்காட்சிக்கு வைக்கிறார்களாம் நம் மீது அன்புள்ள பிள்ளைங்க யாராவது ஒரே ஒரு சின்ன தங்க நாணயத்தை வாங்கி அனுப்புங்க! உங்களோட அன்புப்பரிசாக ஞாபகார்த்தமா வச்சுகிறோம், என்ன டீலா?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...