Pages

Thursday, February 8, 2018

துபையில் மே17 முதல் குப்பையின் எடைக்கு சேவைக்கட்டணம் அமல்!

அதிரை நியூஸ்: பிப்.08
துபையில் மே 17 முதல் எடைக்கு ஏற்றவாறு குப்பைக்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபையின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உள்ளாட்சித்துறைகளின் கூட்டத்திற்குப் பின் துபையில் எடைக்கு ஏற்றவாறும், குப்பைகளின் தன்மைகளுக்கு ஏற்றவாறும், அதே கட்டணத்தை வருடந்தோறும் டன்னுக்கு 10 திர்ஹம் என அதிகரித்துக் கொண்டே செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. எந்தவித கலப்புமற்ற மறுசுழற்சி குப்பைகளுக்கு மட்டும் வருடந்தோறும் 5 திர்ஹம் உயர்த்தப்படும். இந்த புதிய உத்தரவு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

3 வருடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விபரம்:

எந்த மறுபிரயோஜனமும் இல்லாமல் புதைக்க அனுப்பப்படும் குப்பைகளுக்கு:
2018 – 1 டன் சாதாரண குப்பைக்கு - 80 திர்ஹம்
2019 – 1 டன் சாதாரண குப்பைக்கு - 90 திர்ஹம்
2020 – 1 டன் சாதாரண குப்பைக்கு - 100 திர்ஹம்... விலையேற்றம் தொடரும்...

உரம் தயாரிக்க பயன்படும் தொழிலகத்திற்கு அனுப்பப்படும் கரிம (Organic) மக்கும் குப்பைகளுக்கு:
2018 – 1 டன் மக்கும் குப்பைக்கு - 30 திர்ஹம்
2019 – 1 டன் மக்கும் குப்பைக்கு - 40 திர்ஹம்
2010 – 1 டன் மக்கும் குப்பைக்கு - 50 திர்ஹம்... விலையேற்றம் தொடரும்...

ஆர்கானிக் ( மக்கும்) பொருட்களுடன் கலந்த மறுசுழற்சி செய்யப் பயன்படும் குப்பைகளுக்கு:
2018 – 1 டன் மறுசுழற்சி குப்பைக்கு - 30 திர்ஹம்
2019 – 1 டன் மறுசுழற்சி குப்பைக்கு - 40 திர்ஹம்
2010 – 1 டன் மறுசுழற்சி குப்பைக்கு - 50 திர்ஹம்... விலையேற்றம் தொடரும்...

கரிம பொருட்கள் கலப்பில்லாத மறுசுழற்சி செய்யப் பயன்படும் குப்பைகளுக்கு:
2018 – 1 டன் கலப்பற்ற மறுசுழற்சி; குப்பைக்கு - 20 திர்ஹம்
2019 – 1 டன் கலப்பற்ற மறுசுழற்சி குப்பைக்கு - 25 திர்ஹம்
2010 – 1 டன் கலப்பற்ற மறுசுழற்சி குப்பைக்கு - 30 திர்ஹம்... விலையேற்றம் தொடரும்...

விவசாய கழிவுப் பொருட்களுக்கு மட்டும் விலையேற்றம் கிடையாது அதன் நிரந்தரக் கட்டணம் டன்னுக்கு 10 திர்ஹம் மட்டுமே.

அதேபோல், உபயோகமற்ற குப்பைகளான பேப்பர்கள், டேப்புகள், உணவுக் கழிவுகள், உதிரி பாகங்கள், மின் சாதனப் பொருட்கள், மருத்துவக் கழிவுகள் மற்றும் ஆபத்து விளைவிக்கும் பொருட்களுக்கும் தனித்தனியாக கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணம் துபை மாநகராட்சியால் நேரடியாக சேகரிப்படும் பகுதிகளுக்குப் பொருந்தாது மாறாக தனியார் நிறுவனங்களால் அகற்றப்படும் குப்பைகளின் மீதே இப்புதிய கட்டண உயர்வு பொருந்தும். இந்தக் கட்டணங்களை தனியார் குப்பை சேகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து துபை மாநகராட்சி குப்பை கொட்டும் இடம் மற்றும் மறுசுழற்சிக்கு அனுப்பும் இடங்களிலிருந்து வசூலித்துக் கொள்ளும். ஒரு சில தனியார் நிறுவனங்கள் குப்பைகளுக்கு 300 திர்ஹம் வரை கூடுதலாக வசூலிப்பதை கட்டுப்படுத்தவே இச்சேவை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...