Pages

Monday, February 5, 2018

அபுதாபி பேருந்தில் ஓசிப்பயணம் செய்தால் 200 திர்ஹம் அபராதம்!

அதிரை நியூஸ்: பிப்.05
அபுதாபி பொது போக்குவரத்து பஸ்களில் டிக்கெட் எடுக்காவிட்டால் 200 திர்ஹம் அபராதம்

அபுதாபி பொது போக்குவரத்துக்களுக்கான பயண ஒழுங்குமுறை சட்டங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது தற்போது அமுலுக்கு வந்துள்ளது.

டிக்கெட் இல்லாமல் பஸ்களில் பயணம் செய்வது போன்ற சுமார் 25 வகையான பயண போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் பெரிய லக்கேஜ்களை ஏற்றிச் செல்வதும் சைக்கிள் போன்ற வாகனங்களை கொண்டு செல்வதும் அடங்கும்.

மேலும், புதிய ஒழுங்குமுறைகளின்படி சிறுவர்களும் வயதானவர்களும் பயணக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்குப் பெற்றுள்ளனர் என்பதுடன் பிற பயணிகளும் கட்டண செலுத்திட ஏதுவாக கட்டண குறைப்பும் செய்யப்பட்டிருந்தும் சிலர் டிக்கெட் இல்லாமல் தொடர்ந்து பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறல் குற்றங்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இனி டிக்கெட் இல்லா பயணம் மேற்கொண்டால் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாபிலாத் கார்டுகள் (Hafilat Cards) எனப்படும் பயண டிக்கெட் அட்டைகளை பிறருக்கு விற்பனை செய்தலோ அல்லது பிறருடைய கார்டை பயன்படுத்தி பயணம் செய்தாலோ அல்லது பஸ்ஸில் பயணம் செய்யும் நிலையில் டிக்கெட் பரிசோதகர் கேட்கும் போது ஹாபிலாத் கார்டுகளை பரிசோதனைக்கு தராவிட்டலோ 500 திர்ஹம் அபராதம் உண்டு.

அபுதாபி நகரப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணமாக 2 திர்ஹம் (Local Bus Routes) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புறநகர் பேருந்துகளில் (Suburban Bus Routes) 2 திர்ஹத்திற்கு மேல் கூடுதலாக ஒவ்வொரு கி.மீக்கும் 5 காசுகள் வசூலிக்கப்படுகிறது. நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகளில் (Intercity Buses) அடிப்படை கட்டணமாக 10 திர்ஹமும் கூடுதலாக ஒவ்வொரு கி.மீக்கும் 10 காசுகளும் வசூலிக்கப்படுகிறது.

நகரம் மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் 55 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களும், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றாலும் நகரங்களுக்கிடையேயான பஸ் பயணத்தின் போது பாதி கட்டணத்தையே செலுத்த வேண்டும்.

பெரியவர்கள் இந்த சலுகையை பெற ஏதாவது ஒரு அபுதாபி பஸ் நிலையத்தில் எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட் காப்பி, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் 5 திர்ஹம் பதிவு கட்டணம் செலுத்தி பதிந்து கொள்ளலாம். சிறார்களுக்கு பதிவு அவசியமில்லை என்றாலும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளருடன் மட்டுமே பயணம் செய்வதுடன் வயது சான்றை நிரூபிக்கும் ஏதாவது ஒரு ஆவணத்தை வைத்திருக்க வேண்டும்.

இப்புதிய ஒழுங்குமுறைகளின்படி, குறைந்தபட்சம் 200 திர்ஹம் முதல் 2,000 திர்ஹம் வரை பலதரப்பட்ட குற்றங்களின் மீது அபராதம் விதிக்கப்படவுள்ளது. குறிப்பாக காப்பாளர்கள் இல்லாமல் பயணம் செய்யும் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள், சைக்கிள், பைக், வளர்ப்புப் பிராணிகள், பெரிய லக்கேஜ்களை எடுத்துச் செல்வது. சாப்பிடுவது, புகை பிடிப்பது, மதுபான பொருட்களை எடுத்துச் செல்வது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது, பொதுச் சொத்தை நாசப்படுத்துவது (பஸ் நிறுத்தங்களில் ஸ்டிக்கர், நோட்டீஸ் ஒட்டுவது உட்பட) சக பயணியர் மற்றும் டிரைவருக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்து கொள்வது போன்றவை அவற்றில் சிலவாகும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...