Pages

Tuesday, February 6, 2018

அமீரகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்கம் விற்பனை சரிவு!

அதிரை நியூஸ்: பிப். 06
அமீரகத்தில் 2017 ஆம் வருடத்தின் இறுதியில் தங்க சில்லரை விற்பனை பெருமளவில் நடைபெற்றும் ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் (2017) பெரும் சரிவு கண்டுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் அமீரக தங்க வர்த்தகம் சந்திக்காத கடினமான நிலையாகும். எனினும் இது கடந்த 4 ஆண்டுகளாக படிப்படியாக கண்டுவரும் விற்பனை வீழ்ச்சியின் நீட்சியே.

2017 வருடத்தின் இறுதி மாதமான டிசம்பரில் விற்பனை அதிகரித்திருந்ததின் காரணம், துபை ஷாப்பிங் திருவிழாவின் (DSF) துவக்கம் மற்றும் 2018 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்த வாட் வரி விதிப்பிற்கு முன் வாங்கிவிட வேண்டும் என்றிருந்த நிர்பந்தமுமே, இல்லையே இன்னும் கடும் மோசமான விளைவுகளை சந்தித்திருக்கக்கூடும். கடந்த 2016 ஆம் வருடம் சில்லரை வர்த்தகத்தில் 43.4 டன் தங்கம் விற்பனையாகி இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு 42.8 டன் தங்கம் மட்டுமே விற்றுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் விற்ற தங்கத்திலேயே மிகக் குறைவான அளவாகும்.

வளைகுடா பிராந்தியத்திலேயே சவுதியில் தான் 2017 ஆம் ஆண்டு அதிகளவாக 45.7 டன் விற்பனையாகிவுள்ளது என்றாலும் கடந்த ஆண்டு 49.4 விற்பனையானதைவிட குறைவாகும். அதேவேளை ஈரானில் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதன் மூலம் 45.4 டன் விற்பனை செய்துள்ளது என லண்டனை தலைமையகமாக கொண்ட உலக தங்க வர்த்தக மன்றம் (WGC) தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...