Pages

Saturday, February 10, 2018

சவுதியில் சுற்றுலா மற்றும் ஆராய்ச்சிக்காக சுமார் 250 குகைகளை திறந்து விட முடிவு!

அதிரை நியூஸ்: பிப்.10
ஆதிகாலம் முதல் குகைகள் மானுட சமூகத்தை ஈர்க்கும் ஒன்றாகவே விளங்கி வருகிறது. நிகழ்காலத்திலும் சுற்றுலாவாசிகள், மயிர்கூச்சரிய செய்யும் சாகசவாசிகள் மற்றும் ஆய்வாளர்களையும் பெரிதும் ஈர்த்து வருகிறது. உலகெங்கிலுமுள்ள சுமார் 5,000 குகைகள் ஆண்டுக்கு சுமார் 250 மில்லியன் சுற்றுலாவாசிகளை ஈர்ப்பதன் மூலம் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிற்கு வருமானத்தையும் ஈட்டித்தருகின்றன.

குகைகள் மனிதர்களின் மிகச்சிறந்த இயற்கை வாழ்விடங்களாக திகழ்ந்ததுடன் கடுமையான பருவகாலங்களின் போது பாதுகாப்பளிக்கும் உய்விடமாகவும், இவற்றில் பல நீராதாரங்களை கொண்டதாகவும் திகழ்கின்றன. எனவே, அன்றைய நடோடி அரேபியர்களும் தங்களை கடுமையான வெப்பம், குளிர் மற்றும் காற்று போன்றவற்றிலிருந்து காக்கும் பாதுகாப்பான இடங்களாக குகைகளை கருதினர்.

1999 ஆம் ஆண்டு சவுதியின் புவியியல்துறை வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் சவுதியில் உள்ள குகைகளைப் பற்றி தீவிரமாக ஆய்ந்து வருகிறது. மேலும் தற்போது கூடுதலாக 50 குகைகளை ஆராய்வதற்காக ஆஸ்திரியா நாட்டு நிபுணர் குழுவுடன் புதிய ஓப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

சவுதியிலுள்ள சுமார் 250 குகைகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவித்து சுற்றுலா மற்றும் ஆய்வாளர்களுக்கு திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜபல் அல் நூர் என அழைக்கப்படும் நூர் மலையில் கி.பி.610 ஆம் வருடம் முதன்முதலாக திருக்குர்ஆனின் இறைவசனங்கள் இறங்கிய புனித ஹீரா குகை உலகெங்கிலுமிருந்து ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் தரிசிக்கும் இடமாக மிளிர்கின்றது. இதன் நீளம் 3 மீட்டர் அகலம் 1.75 மீட்டர் மட்டுமே. அதேபோல் யாத்ரீகர்களால் புனித ஹரம் ஷரீஃபில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தவ்ர் குகையும் அதன் இஸ்லாமிய வரலாற்றுப் பின்னனியால் அதிகமானோர் வருகை தரும் குகைகளில் ஒன்றாக உள்ளது.

சவுதி அரேபியாவின் மிகப்பெரும் குகையாக ஷாபன் குகைகள் (Shaafan Caves) உள்ளன. இதன் நீளம் சுமார் 2 கி.மீ. அகலம் சுமார் 8 மீட்டர் மற்றும் ஆழம் சுமார் 800 மீட்டர். இதனுள் ஓரிடத்தில் ஏராளமான மிருக எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. தஹ்லாப் குகை மற்றும் தஹல் அல் முரப்பா குகைகளும் அதன் இயற்கை அழகு மற்றும் அதனுள் நிலவும் குளிர்ச்சியால் சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் இடங்களாக உள்ளன. (Tahlab and Dahl Al-Murabbae are both known for their impressive natural scenes and coolness).

இன்றும் சவுதியிலுள்ள பல குகைகளை அதன் அண்மையில் வாழும் மக்கள் அறிந்து வைத்துள்ளதுடன் அதனை நீராதாரங்களாகவும் உபயோகப்படுத்தி வருகின்றனர். பல குகைகள் சுமார் 89,000 சதுர கி.மீ பரப்பளவிற்கு பரந்துள்ள எரிமலை குழம்புகளால் உருவாகியுள்ளன. அவற்றின் பலவற்றில் எலும்புகள், பண்டைய காலப் பொருட்கள் மற்றும் மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான பிற அடையாளங்களும் கிடைத்துள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...