Pages

Saturday, February 3, 2018

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு 'பாலஸ்தீன், தலைநகர்,ஜெருஸலம்' என பெயர்கள் வைப்பு!

அதிரை நியூஸ்: பிப்.03
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு பாலஸ்தீன், தலைநகர், ஜெருஸலம் என பெயரிட்டனர்.

பாலஸ்தீனின் தலைநகர் ஜெருஸலம் முஸ்லீம்களின் மூன்றாவது புனிதப்பள்ளியான மஸ்ஜிதுல் அக்ஸாவை தன்னகத்தே கொண்டது. புனித மக்கா, புனித மதினா பள்ளிகளுக்கு அடுத்து உயரிய இடமும் இதில் தொழுபவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் இடமுமாகும். இந்த 3 பள்ளிகளைத் தவிர்த்து உலகில் உள்ள ஏனைய பள்ளிகள் அனைத்தும் தொழுவதற்கும், நன்மையிலும் சமமானவையே.

மேலும் முஸ்லீம்களின் முதல் கிப்லாவாகவும் மஸ்ஜிதுல் அக்ஸா திகழ்ந்துள்ளதுடன் நபி (ஸல்) அவர்களின் இஸ்ரா மிஹ்ராஜ் எனப்படும் வின்னுலகப் பயணமும் இங்கிருந்து தான் துவங்கியது என இன்னும் பல சிறப்புக்களை உடையது என்றாலும் செய்தியின் தலைப்பிற்குள் நுழைவோம்.

பாலஸ்தீனிய தம்பதியர் ஒருவர் தங்களுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கும் டிரம்பின் சர்வாதிகார அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஜெருஸலம் தங்களின் உதிரத்தோடும் உணர்வுகளோடும் கலந்த ஒன்று என்பதை தெரிவிக்கும் வகையிலும் 3 குழந்தைகளுக்கு பாலஸ்தீன், தலைநகர், அல் குத்ஸ் (ஜெருஸலம் என்பதன் அரபி பதம்) என பெயரிட்டனர்.

கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி ஒரு வகையான மனப்பிரழ்வுக்கு ஆளானவர் போல் நடந்து கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சர்வதேச விதிகள் மற்றும் ஐ.நா தீர்மானங்களுக்கு எதிராக ஜெருசலம் நகரை ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவித்தார் இதனால் உலகெங்கும் அமைதி கெட்டது தான் மிச்சம்.

இந்நிலையில் டிரம்பின் அறிவிப்பிற்குப் பின் சுமார் 2 வாரங்கள் கழித்து பிறந்த தங்களின் 3 குழந்தைகளில் (Triplets) 2 ஆண் குழந்தைகளுக்கு ஜெருஸலம் (அல் குத்ஸ்), பாலஸ்தீன் என்றும் பெண் குழந்தைக்கு தலைநகர் என்றும் பெயரிட்டு தங்களின் எதிர்ப்பையும் ஜெருஸலத்துடன் உள்ள ஆத்மார்த்த உறவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...