Pages

Thursday, February 1, 2018

உலக ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா 32 வது இடத்திலிருந்து 42 வது இடத்திற்கு சரிவு!

அதிரை நியூஸ்: பிப்.01
1946 முதல் செயல்பட்டு வரும் பொருளியல் புலனாய்வுப் பிரிவு ( Economist Intelligence Unit - EIU) எனப்படும் நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர ஆய்வு (An annual Global Democracy Index) ஒன்றில் இந்திய ஜனநாயகம் 32 இடத்திலிருந்து 42 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன் 'குறைபாடுள்ள ஜனநாயக நாடுகள்' ‘(Flawed democracies) எனும் பட்டியலின் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம் இந்திய முஸ்லீம்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள அச்சுறுத்தல்களும் வன்முறையுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு 165 சர்வதேச நாடுகள் மற்றும் 2 சுயாட்சிப் பகுதிகள் ஆகியவை கீழ்க்காணும் 5 பொருள்களின் கீழ் ஆய்வு செய்யப்பட்டன. 1. தேர்தல் செயல்முறை மற்றும் பன்முகத்தன்மை (electoral process and pluralism)  2. சிவில் உரிமைகள் ( civil liberties) 3. அரசாங்கத்தின் செயல்பாடு (the functioning of government) 4. அரசியல் பங்களிப்புகள் மற்றும் 5. அரசியல் கலாச்சாரம் ( political participation and political culture) ஆகியன 4 பெரும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டன.

1. முழு ஜனநாயக நாடுகள் (Full democracy)
2. குறைபாடுடைய ஜனநாயக நாடுகள்  (Flawed democracy)
3. கலப்பு ஆட்சி (Hybrid regime) (ரெண்டுங்கெட்டான் ஆட்சி)
4. சர்வாதிகார ஆட்சி (Authoritarian regime)

உலகில் 19 நாடுகளே முழு ஜனநாயக நாடுகளாக (Full democracy) அறியப்பட்டுள்ளன, அதில் டாப் 10 நாடுகள் வருமாறு:

1. நார்வே 2. ஐஸ்லாந்து 3. சுவீடன் 4. நியூஸிலாந்து 5. டென்மார்க் 6. அயர்லாந்து 7. கனடா 8. ஆஸ்திரேலியா 9. பின்லாந்து 10. சுவிட்சர்லாந்து

குறைபாடுடைய ஜனநாயக நாடுகளின்  (Flawed democracy) பட்டியலில் இந்திய 42 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அந்தப் பிரிவின் கீழ் வரும் பிற நாடுகளாவன:

அமெரிக்கா (21 வது இடம்), ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், ஆக்கிரமிப்பு இஸ்ரேல், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் பல.

கலப்பு ஆட்சி நாடுகளின் (Hybrid regime) பட்டியலில் பங்களாதேஷ் (92), நேபாள் (94 இடம்), பூட்டான் (99), பாகிஸ்தான் (110) மற்றும் பல.

சர்வாதிகார நாடுகள் பட்டியலில் (Authoritarian regime) மியான்மார் (பர்மா) 120, ரஷ்யா 135, சைனா 139, வியட்னாம் 140, சிரியா 166, ஆகக்கடைசியாக 167 இடத்தில் வட கொரியா ஆகியன உள்ளன.

இந்திய எந்த அடிப்படையில் 42 இடத்திற்கு தள்ளப்பட்டது?
இந்திய கடந்த வருடத்தை விட 7.23 புள்ளிகள் குறைவாக பெற்றது. பழமைவாத சிந்தாந்தங்கள் கிளறிவிடப்பட்டுள்ளன. ஒரு மதச்சார்பற்ற நாட்டில் இந்துத்துவ சக்திகள் கட்டுப்பாடற்று எழுந்துள்ளதால் முஸ்லீம்கள் மற்றும் இதர வலிமை குன்றிய இனங்களின் மீது வன்முறை அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளது.

பத்திரிக்கை சுதந்திரமும் 'ஒரு பகுதி சுதந்திரமாகவே' உள்ளது என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது. அரசாங்கம், இராணுவம், தீவிரவாதிகள், அரசுசார்பற்ற சமூக விரோதிகள் போன்றோரிடமிருந்து பத்திரிக்கையாளர்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் அதன் அழுத்தங்கள் ஊடகத்தின் மீது அதிர்வூட்டும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இந்தியா முழுமையுமே குறிப்பாக சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர் போன்றவை பத்திரிக்கையாளர்களுக்கு மிக அபாயகரமான இடங்களாகும். இங்குள்ள அரசு அதிகாரிகளே பல பத்திரிக்கைகளின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியும், பல பத்திரிக்கைகளை வெளிவரவிடாமல் தடுத்தும், பல கட்டுப்பாடுகளுடன் கூடிய இணையதள சேவைக்கூட பெறமுடியாமலும் வைத்துள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே 2017 ஆம் ஆண்டிலும் பல பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில், ஜனநாயகம் கடந்த 2016 ஆம் ஆண்டின் சராசரி புள்ளிகளான 5.52ல் இருந்து 5.48 ஆக சரிவு கண்டுள்ளது, இது ஒட்டுமொத்தமாக 89 சர்வதேச நாடுகளின் சராசரி கணக்காகும். 27 நாடுகளில் ஜனநாயகம் சற்று வளர்ச்சி கண்டுள்ள நிலையில் சுமார் 51 நாடுகள் ஏற்ற இறக்கங்களின்றி ஜனநாயக நிலையை தக்கவைத்துள்ளன.

உலகின் 4.5 சதவிகித மக்கள் முழு ஜனநாயகத்தின் கீழும், 49.3 சதவிகிதம் குறைபாடுள்ள (தள்ளாடும்) ஜனநாயகத்தின் கீழும் வாழ்கின்றனர். அமெரிக்கா 2015 ஆம் ஆண்டை விட 8.9 புள்ளிகள் குறைவாக பெற்று 2016 ஆம் ஆண்டில் முழு ஜனநாயக அந்தஸ்தில் இருந்து அரைகுறை ஜனநாயகப் படுகுழிக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் 3ல் 1 பகுதியினர் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர், அதிலும் பெரும்பாலோர் சீனாவில்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...