Pages

Monday, February 12, 2018

துபை விமான நிலையத்தில் இருந்து 45 நிமிடத்தில் 20 திர்ஹம் கட்டணத்தில் ராஸ் அல் கைமாவிற்கு ஷட்டில் பஸ் சர்வீஸ்!

அதிரை நியூஸ்: பிப்.12
துபை விமான நிலையங்களிலிருந்து 45 நிமிடத்தில் 20 திர்ஹம் கட்டணத்தில் ராஸ் அல் கைமாவிற்கு ஷட்டில் பஸ் சர்வீஸ்

ராஸ் அல் கைமாவின் சுற்றுலா வளர்ச்சி ஆணையம் (RAKTDA)  சார்பில் துபை விமான நிலையம் 1 மற்றும் 3 டெர்மினல்களிலிருந்து ராஸ் அல் கைமாவின் முக்கிய ஹோட்டல்களுக்கு நேரடியாக செல்லும் வகையில் புதிதாக ஷட்டில் பஸ் சர்வீஸ் எனும் அதிவிரைவு பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளது.

இந்த ஷட்டில் பேருந்து சேவையின் துவக்கத்தை சிறப்பிக்கும் வகையில் மிகக்குறைந்த கட்டணமாக 20 திர்ஹம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை சுற்றுலாவாசிகள் www.rakshuttle.com என்ற தளத்திற்கு சென்று டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஷட்டில் பயணத்தின் போது இலவச வைபை வசதி, தண்ணீர் பாட்டில்கள், அமீரக வரைபட வசதிகளும் உண்டு. ராஸ் அல் கைமா எமிரேட்டிற்கு 2018 ஆம் ஆண்டில் 1 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும் என்ற இலக்கின் கீழ் இத்தகு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...