Pages

Thursday, February 1, 2018

சீனாவில் 72,000 திர்ஹம் மதிப்புள்ள சீனப் பணத்தை குப்பையில் வீசிய மனிதன்!

அதிரை நியூஸ்: பிப்.01
சைனாவின் லியோனிங் எனும் பகுதியைச் சேர்ந்தவர் வாங். இவர் ஒரு பிளாஸ்டிக் பையில் குப்பையையும் இன்னொரு பிளாஸ்டிக் பையில் வங்கியில் செலுத்த வேண்டிய சீனப்பணம் 124,000 யுவானையும் (சுமார் 72,379 திர்ஹம்) எடுத்துச் சென்று மறதியாக 2 பைகளையும் குப்பையில் வீசிவிட்டு வங்கிக்கு சென்றார்.

வங்கிக்கு சென்ற பின் தான் தன்னுடைய தவறு தெரிய வர குப்பையை நோக்கி ஓடோடி வந்தார் ஆனால் பணப்பையை காணவில்லை. போலீஸில் புகார் தெரிவிக்க, சிசிடிவி வழியாக பார்க்கும் போது அவருடைய அண்டை வீட்டுக்காரர் குப்பையிலிருந்து பணப்பையை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

போலீஸ் பையை எடுத்த அண்டை வீட்டுக்காரரைத் தேட, நேர்மையான அந்த அண்டை வீட்டுக்காரரோ பணப்பையை தொலைத்தவரை தேடி போலீஸ் நிலையம் சென்றிருந்தார். ஒருவழியாக பணப்பையை திரும்பப் பெற்றுக் கொண்ட உரிமையாளர் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

ஐயோ! இனி குப்பைத் தொட்டியை பார்க்கும் போதெல்லாம் பணத்தை தொலைச்சிருப்போமோ என சந்தேகம் 'கொல்லுமேடா', என்ன செய்யப்போறே!

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...