Pages

Saturday, February 10, 2018

அல்லாஹ்வின் தூதர் பூமியில் அதிகம் நேசித்த 7 புனித இடங்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்.10
அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்பூமியில் வாழும் போது அதிகம் நேசித்த 7 இடங்களையும் அவற்றின் ஒரு சிலவற்றில் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் விவரித்துச் சென்றுள்ளார்கள்.

1. அல் மஸ்ஜிதுல் ஹரம் - அல் மக்கா அல் முகர்ரமாஹ்
தொழுகையின் போது புனித கஃபத்துல்லாஹ்வை நோக்கி தங்களின் முகத்தை (கிப்லாவாக) திருப்புமாறு அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இந்தப் பள்ளியில் தொழப்படும் தொழுகை பிற பள்ளிகளில் தொழப்படும் தொழுகையை விட 1 லட்சம் மடங்கு நன்மை கூடுதல் மிக்கது.

மேலும் கூறினார்கள், நான் அல்லாஹ்வின் மீது சாட்சிகூறுகிறேன், இந்த புனித மக்கா அல்லாஹ் படைத்த நிலப்பகுதிகளிலேயே சிறந்ததாகவும் சிறந்த அருட்கொடையாகவும் திகழ்வதாகவும் நவின்றார்கள்.
2. அல் மஸ்ஜிதந் நபவி - அல் மதீனா அல் முனவ்வரா
நபி (ஸல்) அவர்கள் எங்கள் அல்லாஹ்வே, இந்த மதீனமா நகரை புனித மக்காவை போன்றோ அல்லது அதற்கும் மேலாகவோ எங்களை நேசிக்கச் செய்வாயாக! என பிரார்த்தித்துள்ளார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் வெளியூர் பயணங்களில் இருந்து திரும்பும் போதேல்லாம் மதினாவின் எல்லை தென்பட்டுவிட்டால் தங்களுடைய ஓட்டகத்தை மதீனாவை நோக்கி விரைவாக செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
3. அல் மஸ்ஜிதுல் அக்ஸா – ஜெரூசலம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய புனித இஸ்ரா வ அல் மிஹ்ராஜ் எனும் புனித விண்வெளிப் பயணத்தின் போது இம்மண்ணில் வந்து சென்ற அனைத்து நபிமார்களுக்கும் இந்தப் அக்ஸா பள்ளியில் தான் இமாமத் செய்து தொழுவித்தார்கள்.

 (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். 17:1
4. மஸ்ஜித் அல் குபா – மதீனா (புறநகர்)
அல்லாஹ்வை வணங்குவதற்காக இப்பூமியில் நபி (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் கட்டப்பட்ட முதலாவது பள்ளியாகும். இப்பள்ளியில் தொழுவது ஒரு உம்ரா செய்ததன் நன்மையை பெற்றுத்தரும்.
5. உஹது மலை – மதீனா
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உஹது மலையின் மீது தங்களின் தோழர்களுடன் நிற்கும் போது, உஹது மலை நம்மை நேசிக்கின்றது, நாமும் உஹது மலையை நேசிக்கின்றோம் என நவின்றார்கள்.
6. அல் பகீ எனும் அடக்கஸ்தலம் - மதீனா
ஜன்னத் அல் பகீ எனும் இந்த மண்ணறை தோட்டத்தில் சுமார் 10,000க்கு மேற்பட்ட நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி இங்கு வருகை தந்து இங்கு அடக்கப்பட்டிருக்கும் மண்ணறைவாசிகளுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தணை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். மேலும், நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடும், உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி உங்களுக்கு வந்துவிட்டது என கூறியவர்களாக, யா அல்லாஹ் இம்மண்ணறைவாசிகளை மன்னிப்பாயாக! எனவும் பிரார்த்தணை செய்வார்கள்.
7. அல் மஸ்ஜிதுன் நபவி உள்ளேயுள்ள புனித அல் ரவ்தா – மதீனா
எனது வீட்டிற்கும் (அல் ரவ்தாவிலுள்ள) எனது பிரசங்க மேடைக்கும் இடையே தோட்டங்களுக்கு எல்லாம் தோட்டமான ஒரு சுவர்க்கப் பூஞ்சோலை இருக்கின்றது. எனது குத்பா மேடை அந்தத் தோட்டத்தின் (அல் கவ்ஸர் போன்றதொரு) நீர் தடாகத்தின் மீது அமைந்திருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் புனித அல் ரவ்தாவை சிறப்பித்துச் சொல்லியுள்ளார்கள்.

வேண்டுகோள்: 
இந்த 7 இடங்கள் தொடர்புடைய ஹதீஸ் அறிவிப்புக்களை வாசகர்கள் ஹதீஸ் நூலின் பெயர், அறிவிப்பாளர் மற்றும் ஹதீஸ் எண்ணுடன் குறிப்பிட்டால் அவற்றை பிற்சேர்க்கையாக இணைத்துக் கொள்கின்றோம். இந்தப் பதிவு சவுதி கெஸட் என்ற பத்திரிக்கையில் கண்டுள்ளவாறு அப்படியே தரப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...