Pages

Monday, February 5, 2018

8,000 பச்சை கிளிகளுக்கு தினமும் உணவளிக்கும் 'சென்னையின் பறவை மனிதன்' (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்.05
சென்னையில் 63 வயது ஜோசப் சேகர் எனும் கேமரா ரிப்பேரிங் டெக்னிஷியன் ஒருவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தன் வீட்டு மொட்டை மாடிக்கு வரும் விருந்தாளிகளான சுமார் 8,000 பச்சைக் கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். இந்த பச்சை கிளிகள் நேசருக்கு மக்கள் வைத்துள்ள பெயர் 'சென்னையின் பறவை மனிதன்'.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜோசப் சேகர் தினமும் 30 கிலோ உணவுப் பொருட்களை கிளிகள் அமர்ந்து உண்பதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள சட்டகங்களில் இடுகிறார். இதற்காக தன்னுடைய சம்பளத்தில் பாதியை செலவிடுகின்றார். அதாவது தினமும் 850 ரூபாயை உணவுகளுக்காக செலவிடுகிறார்.

ஆரம்பமாக, 2004 ஆம் சுனாமி பேரழிவு ஏற்பட்ட போது சிறிய அளவில் பச்சை கிளிகள் இவரது வீட்டு மொட்டை மாடிக்கு வரத்துவங்கியுள்ளது அவற்றிற்கு உணவளிக்க யதார்த்தமாக துவங்கியுள்ளார். நாளாக நாளாக பச்சைக் கிளிகளின் வருகை இன்று வரை தினமும் சுமார் 8,000 எண்ணிக்கை வரை எட்டியுள்ளது. இவர் தன் பணியிலிருக்கும் போது கிளிகள் இவரது தோள்களில் ஏறி தோழர்களாய் விளையாடுகின்றன. இவரது வீட்டில் நிகழும் இந்த அதிசய பிணைப்பை பார்க்க வெளிநாட்டினர் உட்பட பலர் வருகிறார்களாம்.

Sources: Gulf News & Hindustan Times
தமிழில்: நம்ம ஊரான் 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...