Pages

Friday, February 23, 2018

அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள் நிழற்குடை திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் கே.பிரேம், மண்டலத் தலைவர் எஸ்.டி.எஸ் செல்வம், வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் எஸ். முகமது ரபி, அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை ஏரிப்புறக்கரை நுழைவாயில் கல்லூரி முக்கம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக புனரமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக, லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் பி. கணபதி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது செய்து இருந்தார். முடிவில் செயலர் எம்.அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார். 

இவ்விழாவில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் சாரா எம். அகமது, எம்.சாகுல் ஹமீது மற்றும் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த என்.யூ ராமமூர்த்தி, ஆர்.செல்வராஜ், என்.ஆறுமுகச்சாமி, எம்.நிஜாமுதீன், சி.சார்லஸ், முல்லை ஆர். மதி, அப்துல் ஜலீல், ரெஜிஸ்கான், அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. மண்டலத் தலைவர் மரியாதைக்குரிய செல்வம் சார் அவர்கள் நீடுடிவாழ வாத்துக்கள்
    எனக்கு சவுதி அரபியாவில் செல்வம்சார் டெக்னிக்கல் சூப்ரண்டாக இருந்த காலங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றன

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...