Pages

Thursday, February 22, 2018

செல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் மூலம் நீரேற்றம் மையம் அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு!

பட்டுக்கோட்டை, பிப்.22
பட்டுக்கோட்டை ஒன்றியம், சேண்டாக்கோட்டை செல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்புவதற்கு வரத்து வாய்க்கால் அமைத்து கூடுதலாக தண்ணீர் கொண்டு வருவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (22.02.2018) வியாழக்கிழமை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை பகுதியில் கல்லணை கால்வாயிலிருந்து ராஜாமடம் கால்வாய் மூலம் செல்லிக்குறிச்சி ஏரிக்கு நீர்வரத்தானது வருவது போல் அமையப்பெற்றுள்ளது. மேலும், கூடுதலாக மகாராஜா சமுத்திர ஆற்றிலிருந்து மோட்டார் மூலம் நீரேற்றம் மையம் அமைத்து கூடுதலாக தண்ணீர் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  இதன் மூலம் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக சாகுபடி செய்வதற்கு பயன்படும்.

இந்த ஆய்வின் போது, பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்ரமணியன், பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன், அக்னியாறு செயற்பொறியாளர் செல்லமுத்து, பொறியாளர்கள் ராஜேந்திரன்,வெள்ளிமலர், வட்டாட்சியர் ரகுராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...