Pages

Thursday, February 1, 2018

திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

பேராவூரணி பிப்.01
தஞ்சாவூர் மாட்டம், பேராவூரணி பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர்கள் குமரவடிவேல், சித்ரா மற்றும் அதிகாரிகளுடன், ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் ஆகிய பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். பின்னர் ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், மாணவர்களிடம் பேசுகையில், "வரவிருக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பிடம் பெறவேண்டும். தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

அம்மையாண்டி பகுதியில் நடைபெற்று வரும் பசுமை வீடு
கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். துலுக்கவிடுதி, ஆவணம் பகுதிகளில் அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார். வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆய்வு செய்தார்.

சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு
பேராவூரணி பயணியர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரையை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு நேரில் சந்தித்து, வரவிருக்கும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், பூக்கொல்லை மற்றும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள காட்டாற்றில் உள்ள பாலத்தை உயர்மட்டப் பாலமாக அமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

வாடகைக்கார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஏற்கனவே இருந்தபடி  கார் நிறுத்துமிடம் அமைக்க அனுமதி  கோரி மனு அளித்தனர். ஆசிரியர் மற்றும் அனைத்து துறை அரசு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள், வீர.சந்திரசேகர், சரவணன், ராகவன்துரை, செல்லதுரை மற்றும் தமிழ் ஆர்வலர் தங்கவேலனார்  ஆகியோர்  தலைவர் புலவர் சு.போசு தலைமையில் சந்தித்து பேராவூரணியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதி கோரி மனு அளித்தனர்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியருடன் வட்டாட்சியர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, வேளாண் உதவி இயக்குநர் மதியரசன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஆணையர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், தலைமை நில அளவையர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் அஷ்ரப், கிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...