Pages

Wednesday, February 7, 2018

அதிராம்பட்டினம் ஹாஜா நகரில் மரக்கன்றுகள் நடும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை மற்றும் ஹாஜா நகர் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இனைந்து மரக்கன்றுகள் நடும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆறுமுகம் தலைமை வகித்தார். செயளாளர் டி. முகமது நவாஸ் கான், பொருளாளர் இசட். அகமது மன்சூர், எம். சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை பட்டுக்கோட்டை விதைகள் அமைப்பின் நிறுவனர் சக்திகாந்த் தொடங்கி வைத்தார். இதில், அதிராம்பட்டினம் ஹாஜா நகர் தொடங்கி ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் 20 இடங்களில் வாகை, நாவல், பூவரசு, வேம்பு, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.. 

இந்நிகழ்ச்சியில், ஹாஜா நகர் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் எம்.முகமது இப்ராஹிம், செயலாளர் எஸ்.நவாஸ், ஐ.சபீக், ஜே.அசாருதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
  
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...